Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்: மெஸ்சியை வீழ்த்தினார் விராட் கோலி!

ந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை விராட் கோலி பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த பார்சிலோனா அணியின் முன்கள வீரரும்,  அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயனல் மெஸ்சியை அவர் இரண்டாவது இடத்துக்கு தள்ளியுள்ளார்.

இது குறித்து கூகுள் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், '' தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற அசத்தல் வெற்றி , பார்சிலோனா சூப்பர் ஸ்டாரை பின்னுக்குத் தள்ள விராட் கோலிக்கு உதவியாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 3வது இடம் சச்சினுக்கு. அமெரிக்காவில் நடந்த 'ஆல் ஸ்டார்ஸ்' கிரிக்கெட்,  சச்சின் பிரலபத்துக்கு இன்னும் உதவியாக இருப்பதாக தெரிகிறது. இந்த ஆண்டு தோனியின் தலைமை அதிகமாக விமர்சனத்திற்குள்ளானதால், அவர் பட்டியலில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதோடு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் தோனியின் பாப்புலாரிட்டி குறைவதற்கு காரணமாக அமைந்து விட்டது.

போர்ச்சுக்கல் கேப்டனும் ரியல்மாட்ரிட் ஸ்ட்ரைக்கருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ 5வது இடத்தை பெற்றுள்ளார். ரியல்மாட்ரிட் முக்கிய ஆட்டங்களில் தோல்வியை சந்திப்பது ரொனால்டோவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் 6-வது இடத்தை பிடிக்கிறார். இந்தியர்கள் மத்தியில் ஃபெடரர் மீது தனி  அன்பும் பற்றும் இருக்கிறதாம்.

சானியா மிர்சா  இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே கிரிக்கெட்டர் அல்லாத இந்திய விளையாட்டு நட்சத்திரம். இவருக்கு 7-வது இடம். நடப்பாண்டில் மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என இரு கிராண்ட் ஸ்லாம் பட்டம்  உள்பட 9 பட்டங்களை சானியா கைப்பற்றியது, அவரது பாப்புலாரிட்டியை அதிகரித்துள்ளதாம்.

அண்மையில் திருமணம் செய்த ரோகித் சர்மாவுக்கு 8-வது இடம். இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து கிட்டத்தட்ட ஓரம் கட்டுப்பட்டுவிட்ட யுவாஜுக்கு இன்னமும் மவுசு குறையவில்லை. இவர் 9-வது இடத்தை பிடித்துள்ளார். மாடலும் நடிகையுமான ஹசல் கீச்சுடன் யுவாஜுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட சமயத்தில் கூகுளில் யுவராஜை அதிகம் பேர் தேடியுள்ளனர்.

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நவோக் ஜோகோவிச், இந்த பட்டியலில் 10-வது இடத்தை பெற்றுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close