Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யுவராஜ் மீண்டும் சேர்ப்பு!

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12 ல்  தொடங்கி 31-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில், அந்நாட்டுடன் இந்திய அணி 5 ஒருநாள் போட்டியிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதற்காக இந்திய ஜனவரி 6-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

5 ஒருநாள் போட்டி

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு தோனி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, மணிஷ் பாண்டே, ரஹானே, அஷ்வின், ஜடேஜா, முகமது ஷமி, அக்சர் படேல், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், குர்கீரத் மான் சிங், ரிஷி தவான், பரிந்தர் சரண் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

20 ஓர் போட்டி

மூன்று 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் தோனி, ஷிகர் தவான், ரோகித், விரோத் கோலி, ரஹானே, யுவராஜ், ரெய்னா, அஷ்வின், ஜடேஜா, முகமது ஷமி,  ஹர்பஜன், உமேஷ் யாதவ், ஹர்திக், புவனேஷ்வர் குமார், நெஹ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த இரு அணிகளுக்கும் கேப்டனாக தோனி செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்