Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கரடு முரடு மனிதர்களையும் கனிய வைத்த சிறுவன் (வீடியோ)

பொதுவாக கால்பந்து வீரர்கள் சற்று கரடு முரடாகத்தான் இருப்பார்கள். களத்தில் எதிரணி வீரர்களை தாக்குவதில் இருந்து அத்தனை அக்கப் போர்களும் மைதானத்தில் நிகழும். ஆனால் இந்த உலகத்துக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் கால்பந்து உலகம்தான் உதவி கரத்தையும் நீட்டும்.

          
அந்த வகையில் லெபனான் தலைநகர் பெய்ருட்டில் ஐ.எஸ். இயக்கத்தால் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு சம்பவத்தில் 3 வயது சிறுவன் தாய் தந்தையரை இழந்தான். சிறுவனின் நிலை குறித்து செய்திகள் வெளிவர, தற்போது ரியல்மாட்ரிட் அணி ஹைதரை மாட்ரிட் நகருக்கு அழைத்து வந்துள்ளது.

தற்போது ரியல்மாட்ரிட் அணியின் விருந்தினராக மாட்ரிட் நகரில் தங்கியுள்ளான்.  சான்டியாகோ பெர்னாபூ மைதானத்தில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சிறுவன் பங்கு கொண்டான். இந்த சிறுவனுக்கு கால்பந்து வீரர் ரொனால்டோவை மிகவும் பிடிக்கும். இதனையடுத்தே ரியல்மாட்ரிட் அணி அந்த சிறுவனை மாட்ரிட் நகருக்கு அழைத்து வந்து ரொனால்டோவை சந்திக்க வைத்தது.

 ஸ்பானீஷ் லீக்கில் இன்று ரியல் வால்கனோ அணிக்கு எதிராக ரியல்மாட்ரிட் விளையாடுகிறது. கவுரவ விருந்தினராக இந்த போட்டியை சிறுவன் ஹைதர் பார்க்கப் போகிறான்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ