Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிளப் உலகக் கோப்பை பார்சிலோனா சாம்பியன்; பேயர்னில் இருந்து பெப் விலகல் !

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 3- 0 என்ற கோல் கணக்கில் ரிவர் பிளேட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஜெர்மனி ஜாம்பவான் பேயர்ன் மியூனிச் அணியின் பயிற்சியாளராக இருந்த பெப் கார்டியாலா விலகுகிறார். அவருக்கு பதிலாக  ரியல்மாட்ரிட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி, பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானில் உள்ள யோகஹாமா நகரில் இறுதி ஆட்டம்  நடைபெற்றது. இதில் பார்சிலோனாவுடன் தென்அமெரிக்க சாம்பியன் ரிவர் பிளேட் அணி மோதியது. இந்த போட்டியில் காயம் காரணமாக களம் இறங்கமாட்டார் என்று கூறப்பட்ட,   லயனல் மெஸ்சியும் விளையாடினார். முதல் பாதியில் 36வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் கோல் கணக்கை லயனல் மெஸ்சி தொடங்கினார்.

பிற்பாதியில் 49 மற்றும் 68வது நிமிடங்களில் சவுரஸ் பார்சிலோனாவுக்கான மேலும் இரு கோல்களை அடித்தார். ரிவர் பிளேட் அணியால் ஆறுதல் கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் பார்சிலோனா அணி 3- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிளப் உலகக் கோப்பையை வென்றது.

ஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் பேயர்ன்மியூனிச் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த பெப் கார்டியாலோ அந்த அணியில் இருந்து விலகுகிறார். ரியல்மாட்ரிட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி, பேயர்னின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெப் கார்டியாலா மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ