Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவா அணி உரிமையாளரை தாக்கியதாக சென்னை அணி வீரர் எலானா புளூமர் கைது!

கோவா அணியின் உரிமையாளரை தாக்கியதாக சென்னை அணியின் நட்சத்திர வீரர் எலானா புளூமர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப் போட்டி நேற்று வதோதராவில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. போட்டி முடிந்ததும் கோவா அணியின் உரிமையாளரை தாக்கியதாக எலானா புளூமர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  மர்கோவா காவல் நிலையத்திற்கு எலானா புளூமர் கொண்டு செல்லப்பட்டாரா அல்லது அவராக அங்கு சென்றாரா என்று தெரியவில்லை. ஆனால் இந்த வழக்கில் உடனடியாக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 321, 341,504 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது வேண்டுமென்றே காயப்படுத்துதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் அவமானப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது.

பின்னர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நள்ளிரவு 1.30 மணியளவில்தான் ஜாமீன் கிடைத்துள்ளது. தொடர்ந்து அதிகாலை 3 மணியளவில் அவர் ஹோட்டல் அறைக்குத் திரும்பியுள்ளார். பிரேசில் நாட்டவரான புளுமர் இழைத்தது ஜாமீனில் விடுவிக்கப்படும் குற்றம்தான் என்பதால், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கிடையே இன்று காலை 5 மணியளவில்  புளூமர் பிரேசில் புறப்பட்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

போட்டி நடந்த வதோதரா மைதானத்தில்  எப்.சி. கோவா வீரர்கள் இருந்த பெஞ் பகுதிக்கு,  எலானோ வந்துள்ளார். அப்போது அங்கிருந்த  கோவா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான தத்தராஜ் சல்கோகரை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தன்னை தாக்கியதாக தத்தாராஜ் சல்கோகர்,  மர்கோவா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close