Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிளாட்டினியும் சிக்கினார் : பிளேட்டருக்கு 8 ஆண்டுகள் கால்பந்து நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை!

பிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டர் மற்றும்  யூஃபா தலைவர் மைக்கேல் பிளாட்டினிக்கு 8 ஆண்டுகள் கால்பந்து தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2011-ம் ஆண்டு பிஃபா தலைவரான ஜோசப் பிளேட்டர், யூஃபா (ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு )  தலைவராக இருந்து வரும் மைக்கேல் பிளாட்டினிக்கு 2 மில்லியன் சுவிஸ் பிராங்க் அளித்ததாக புகார் எழுந்தது.  பிஃபா கணக்கில் இருந்தே இந்த தொகை, மைக்கேல் பிளாட்டினியின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பிஃபா எதிக்ஸ் கமிட்டி விசாரித்து வந்தது.

ஜெர்மனியை சேர்ந்த நீதிபதி ஹன்ஸ் ஜோக்கிம் எக்கர்ட் தலைமையில் விசாரணை நடைபெற்றது.கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை பிஃபாவின் தொழில்நுட்பக் குழு ஆலோசகராக பணியாற்றியதற்காக மைக்கேல் பிளாட்டினிக்கு இந்த தொகை  வழங்கப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டது.

ஆனால் இது தொடர்பாக எந்த எழுத்துப்பூர்வமான ஆவணமும் இல்லை. வாய்மொழியாக ஏற்றுக் கொண்டதாக இருவர் தரப்பிலும் கூறப்பட்டது. ஆனால் பிஃபா தலைமையகம் அமைந்துள்ள ஸ்விட்சர்லாந்து நாட்டு விதிகளின்படி, இது சட்டத்திற்கு புறம்பானது என்பதால் நீதிபதி இத்தகைய வாதத்தை ஏற்கவில்லை.

குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டருக்கும் மைக்கேல் பிளாட்டினிக்கும் தலா 8 ஆண்டுகள் கால்பந்து தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  ஜோசப் பிளேட்டருக்கு 50 ஆயிரம் சுவிஸ் ஃபிராங்கும், பிளாட்டினிக்கு 80 ஆயிரம் சுவிஸ் பிராங்கும் அபராதமும்  விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த  1998ஆம் ஆண்டு முதல் தற்போது வரை   ஜோசப் பிளேட்டர் பிஃபா இருந்து வருகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளையடுத்து அவர் ராஜினாமா செய்திருந்தாலும் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை பிஃபா தலைவராக தொடர்கிறார். வரும் பிப்ரவரி மாதம் பிஃபா புதிய தலைவருக்கான  தேர்தல் நடைபெறவிருக்கிறது.

மைக்கேல் பிளாட்டினி,  பிரான்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் கூட. அத்துடன் 3 முறை 'பல்லான் டி ஆர்' விருது பெற்ற மிகச்சிறந்த கால்பந்து வீரரும் ஆவார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ