Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஃபா உலகக் கோப்பை வசப்படுமா? 11 ஜோடி கால்களை உருவாக்குமா ஐ.எஸ்.எல்.?

ந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இரண்டாம் சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது. பரபரப்பான ஃபைனலில், கோவாவை வீழ்த்தி மகுடம் சூடியிருக்கிறது சென்னையின் எஃப்.சி அணி.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, ஐ.பி.எல்-லில் இருந்து நீக்கப்பட்ட சோகத்தை மறைத்துள்ளது இந்த வெற்றி. கால்பந்து இந்தியாவில் பிரபலமடைவது சாத்தியமில்லை என பலரும் ஆருடம் சொல்ல, உலகின் ஐந்தாவது புகழ்பெற்ற கால்பந்து தொடர் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது ஐ.எஸ்.எல். சென்ற ஆண்டை விட இவ்வருடம் வரவேற்பு அதிகம், எதிர்பார்ப்பும் அதிகம், ரசிகர்களின் ஆதரவும் அதிகம்.

இத்தொடரைப் பற்றிய கண்ணோட்டம் இங்கே…



கேப்டன் டூ கேப்டன்


மொத்தமுள்ள எட்டு ஐ.எஸ்.எல் அணிகளில், நான்கில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இணை உரிமையாளர்களாக இருக்கின்றனர். முதல் தொடரின் இறுதிப் போட்டியில் கங்குலியின் கொல்கத்தா அணியும், சச்சினின் கேரளா அணியும் மோதின. இரண்டாவது தொடரின் இறுதிப் போட்டியில் தோனி உரிமையாளராக உள்ள சென்னையும், விராத் கோலியின் கோவா அணியும் மோதின. இரண்டு தொடரிலுமே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள்தான் பைனலில் மோதியுள்ளனர், கோப்பையையும் வென்றுள்ளனர்.

இரண்டு சீஸன் – இரண்டு கோப்பை



ஐ.எஸ்.எல் தொடரிலேயே மிகவும் மகிழ்ச்சியான வீரர்களாக சென்னை அணியின் கோல்கீப்பர் எடல் அபோலாவும், ஃபிக்ருவுமாகத்தான் இருப்பார்கள். விளையாடிய இரண்டு சீசன்களிலும் சாம்பியன் என்றால் சும்மாவா? முதல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி கோப்பையை வென்ற இருவரும்,  இந்த ஆண்டு சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இவர்கள் வந்த ராசியோ என்னவோ சென்னை அணி இம்முறை கோப்பையை வென்றுவிட்டது. இவர்கள்தான் ஐ.எஸ்.எல் லின் தங்க முட்டையிடும் வாத்துகளோ ?

கொலம்பியன் கோஸ்ட் ரைடர் - மெண்டோசா

ஜான் ஸ்டீவன் மெண்டோசா - ஐ.எஸ்.எல் இரண்டாம் சீசனின் ஒற்றை மையப் புள்ளி என்றால் அது இவர்தான். 23 வயதேயான இவர் எதிரணியின் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. 13 கோல்கள் அடித்து, தொடரின் சிறந்த வீரர் விருதையும், தங்க காலனி விருதையும் ஒருசேர தனதாக்கியுள்ளார் இந்த கொலம்பிய கோஸ்ட் ரைடர். உண்மையிலேயே கோஸ்ட் ரைடர் போன்ற வேகம். எதிரணியினர் ஒரு நொடி தாமதித்தாலும் மின்னலென கோல்கம்பம் நோக்கிப் பாய்ந்து கோலடித்து விடுவார். இரண்டு சீசனிலும் சேர்த்து  17 கோல்களுடன் ஐ.எஸ்.எல் லின் லீடிங் கோல் ஸ்கோரராக உருவெடுத்துள்ளார் மெண்டோசா.

 

ஒரு சில முன்கள வீரர்கள் தாங்களே கோலடிக்க வேண்டுமென்று நினைப்பர். ஆனால் இவர் அப்படியல்ல. சற்றும் சுயநலமற்றவர். கேரள அணிக்கெதிரான ஒரு போட்டியில் கோல் அடிக்க மிகவும் எளிதான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தோய் சிங் கோலடிக்க பந்தை அவரிடம் பாஸ் செய்தார் மெண்டோசா. தோய் சிங் அதை விட்டுவிட, பயிற்சியாளர் மாடரசியிடம் வாங்கிக்கட்டிக் கொண்டார் மெண்டோசா. ஆனாலும் கோவப்படாமல் தன் ஆக்ரோஷத்தை ஆட்டத்தில் காட்டி இவர் ஹாட்ரிக் அடித்தார். இதுதான் மெண்டோசாவின் ஸ்டைல். இதுதான் அவர் வெற்றியின் ரகசியம். சென்னை அணியின் சிங்கம்  என்பதைவிட ஐ.எஸ்.எல் தொடரின் அல்டிமேட்  ஸ்டார்  என்றே சொல்லலாம்.

சென்னை மக்களுக்காக...

இந்த தொடரில் மெண்டோசாவின் ருத்ரதாண்டவத்திற்கு பெரிதும் உறுதுணையாய் இருந்தவர், இந்தியாவைச் சார்ந்த ஜீஜே லால் பெகுலா . இந்த சீசனுக்கான வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வாங்கிய  இவர் பேசியதும், அரங்கம் ஆடியே போச்சு.

 

“சென்னை மக்கள் வெள்ளத்தால் ரொம்ப பாதிக்கப்பட்டுவிட்டார்கள். ஆனாலும் எங்களுக்கு சற்றும் குறையாத ஆதரவை அளித்து வந்தார்கள்.  கோப்பையை  நாங்கள் அவர்களுக்காகத்தான் வெல்ல வேண்டும் என்று நினைத்தோம். அதை நிகழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வெற்றியை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்” என்று சொல்ல அரங்கில் இருந்த முக்கால்வாசி கோவா ரசிகர்களும் அவரை பாராட்டினர். தாங்க் யூ ஜி(ஜே)!

பொழிந்த கோல் மழை

இந்த ஆண்டு ஐ.எஸ்.எல் லில் கோல்கள் மழையாகப் பொழிந்தன.  விளையாடப்பட்ட 61 போட்டிகளில் மொத்தம் 186 கோல்கள் அடிக்கப்பட்டன. போட்டிக்கு சராசரியாக 3 கோல்கள் என்பது ஒரு அளப்பரிய மைல்கல். கடந்த ஆண்டு 129 கோல்களே அடிக்கப்பட்டிருந்தன. இதில் கோவா அணி அதிகபட்சமாக 32 கோல்கள் போட்டது. ஒரு ஆட்டத்தில் அதிகபட்சமாக கோவா அணி 7 கோல்கள் அடித்தது. மும்பைக்கு எதிரான அப்போட்டியில்,  ஐ.எஸ்.எல் லின் மிகப்பெரிய வெற்றியையும் கோவா அணி பதிவு செய்தது. அதிகபட்சமாக மெண்டோசா 13 கோல்களும், ஹியூம் 11 கோல்களும் போட்டனர். இந்தியர்களில் அதிகபட்சமாக சுனில் சேத்ரி 7 கோல்கள் அடித்தார்.



ஹாட்-ட்ரிக் மன்னர்கள்


கடந்த ஐ.எஸ்.எல் சீசனில் ஒரு ஹாட்ரிக் கோல்தான் அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை சென்னையின் மெண்டோசாவும், கொல்கத்தாவின் ஹியூமும் ஆளுக்கு இரண்டு ஹாட்ரிக் அடித்து அசத்தியுள்ளனர். இதில் மெண்டோசா ஐ.எஸ்.எல் வரலாற்றில் இரண்டு ஹாட்ரிக் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்திய வீரர்கள் பங்கிற்கு,  மும்பை எஃப்.சி அணியில் விளையாடும் இந்திய அணிக் கேப்டன் சுனில் சேத்ரியும் ஹாட்ரிக் அடித்து அசத்தினார்.

 
அதிகம் உயராத சிவப்பு அட்டைகள்

இத்தொடரில் விளையாடிய அனைத்து அணிகளும் தேர்ந்த முறையில்,  விளையாட்டு உணர்வோடு மட்டும் விளையாடினர். இத்தொடரில் மொத்தம் 8 சிவப்பு அட்டைகளும்,  250 மஞ்சள் அட்டைகளும் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளதே இதற்கு மிகச் சிறந்த உதாரணம். மும்பை அணிக்கு சிறந்த அணிக்கான ‘ஃபேர் பிளே' விருது கொடுக்கப்பட்டது. ஆங்காங்கே சில சண்டைகள், மோதல்கள் நிகழ்ந்திருந்தாலும் அமைதியாகவும், சுமூகமாகவும் நிறைவடைந்துள்ளது இந்த ஐ.எஸ்.எல் சீசன் 2.



திடமாய் கால்பதித்த கால்பந்து

'இந்தியாக்காரங்க கிரிக்கெட் மட்டும்தான் பார்க்கிறோம்... மத்த விளையாட்டுக்கு முக்கியத்துவமே இல்ல'னு நம்ம ஹாக்கி வீரர்கள் உட்பட ஊரே புகார் வாசிக்கும். அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளிதான் இந்த ஐ.எஸ்.எல்- லின் அபார வெற்றி. சராசரியா ஒவ்வொரு போட்டியையும் 27,224 பேர் நேரடியாகப் பார்த்துள்ளனர். தொலைக்காட்சி, இணையம் வழிகாகப் பார்த்தவர்களின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது. அதிலும் சென்னை ரசிகர்களெல்லாம் மழையையும் பொருட்படுத்தாது நேரடியாகப் போட்டியை கண்டு ரசித்தனர். மக்களை மகிழ்வித்தால் இந்தியன் எதையும் ஆதரிப்பான் என்பதுதான் ஐ.எஸ்.எல் வெற்றி நமக்குக் கற்றுத் தருவது. இதுவரை கோப்பையை வென்ற கொல்கத்தா,சென்னை அணிகளையும் தாண்டி இங்கு வெற்றி பெற்றிருப்பது என்னவோ கால்பந்துதான்.

தடம் பதித்த இந்தியர்கள்

வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்ல. இந்த சீசனில்  இந்திய வீரர்கள் பலரும் பிரகாசித்துள்ளனர். சேத்ரி, ஜீஜே மட்டுமல்லாமல் பல இளம் திறமைகளையும் அடையாளம் காட்டியுள்ளது இந்தத் தொடர். எடுத்துக்காட்டாக தொடக்கத்தில் வெளிநாட்டு  கோல்கீப்பருடன் களமிறங்கிய கொல்கத்தா, கோவா, புனே போன்ற அணிகள் பின்னர் தங்கள் அணியின் இளம் இந்திய கோல்கீப்பர்களுக்கு வாய்ப்பு வழங்கியது.

 

நார்த் ஈஸ்ட் அணியின் ரஹனேஷ், கோவாவின் கட்டிமானி, கொல்கத்தாவின் அம்ரிந்தர் ஆகியோரின் செயல்பாடுகள் வியக்கத்தக்க வகையில் இருந்தன. இறுதிப் போட்டியில் இரண்டு பெனால்டிகளைத் தடுத்த கட்டிமானியின் செயல்பாட்டை யாரும் மறந்துவிட முடியாது. மற்ற இந்திய வீரர்களில் கொல்கத்தாவின் இசுமி, டெல்லியின் இந்திய தேசிய அணி வீரர் ராபின் சிங், கேரளாவின் முகமது ரஃபி ஆகியோர் தாக்குதல் ஆட்டத்தில் எதிரணியினருக்கு கிலி ஏற்படுத்தினார்கள். இசுமி 5 கோல்களும்,ராபினும் ரஃபியும் தலா 4 கோல்களும் அடித்தனர். தடுப்பாட்டத்தில் தோய் சிங்,மெஹ்தாப் சிங் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களோடு இணைந்து அவர்களுக்கு நிகரான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். அவர்கள் முறையே 67 மற்றும் 68 முறை எதிரணி வீரர்களிடமிருந்து பந்தை தன்வசப்படுத்தினர்.

எப்படி ரஹானே, ஜடேஜா, ஷமி, புவனேஷ் போன்ற வீரர்களை ஐ.பி.எல் போட்டிகள் அடையாளம் காட்டியதோ, அதைப்போலவே நம் மண்ணில் மறைந்துள்ள கால்பந்து திறமைகளை அடையாளம் காட்டியதில் ஐ.எஸ்.எல் லின் பங்கு அளப்பரியது. இந்த வீரர்களுக்கு இதுபோன்று தொடர்ந்து ஊக்கமளித்து பயிற்சி அளிக்கும் பட்சத்தில்,  இந்திய அணி மற்ற அணிகளோடு சரிசமமாக போட்டிபோட முடியும்.

கால்பந்தின் வளர்ச்சி தொடரும் பட்சத்தில்,  இந்தியாவும் ஃபிஃபா உலகக் கோப்பையில் கண்டிப்பாக பங்குபெறும்.நெய்மர்  , மெஸ்ஸி , ஆகியோர் பெயர்களை சொல்லிக்கொண்டு அர்ஜென்டினா, பிரேசில் போன்ற அணிகளுக்கு ஆதரவு அளிக்காமல், இந்திய கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு லீவு போட்டு இந்திய - அர்ஜென்டினா ஆட்டத்தைப்  பார்க்கும் நாள் நிச்சயம் வரும். இந்தியாவில் 110 ஜோடி கால்கள் உள்ளன. அதில் இருந்து தேவை 11 ஜோடி மட்டுமே... பிஃபா உலகக் கோப்பை வசப்படும்!

-மு.பிரதீப் கிருஷ்ணா  ( மாணவ பத்திரிகையாளர் )

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ