Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டோக்கியோ விமான நிலையத்தில் மெஸ்சியிடம் தகராறில் ஈடுபட்ட ரிவர்பிளேட் ரசிகர்கள் (வீடியோ)

டந்த ஞாயிற்றுக்கிழமை ஜப்பானில் உள்ள யோகஹாமா நகரில் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனா அணியுடன் அர்ஜென்டினாவை சேர்ந்த ரிவர்பிளேட் அணி மோதியது.  பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

          

போட்டியை காண ஆயிரக்கணக்கான ரிவர்பிளேட் ரசிகர்கள் யோகஹாமா நகருக்கு வந்திருந்தனர். போட்டி முடிந்ததையடுத்து நேற்று பார்சிலோனா அணி டோக்கியோவில் இருந்து ஸ்பெயினுக்கு புறப்பட்டது.  இதற்கான டோக்கியோ விமான நிலையத்துக்கு பார்சிலோனா அணி வீரர்கள் நேற்று இரவு வந்தனர்.

அப்போது விமான நிலையத்தில் இருந்த சில ரிவர்பிளேட் அணி வீரர்கள் லயனல் மெஸ்சியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மெஸ்சியும் பதிலுக்கு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

பார்சிலோனா அணியின் சக வீரர்கள்  சவுரஸ், ஜேவியர் மச்சரானோ ஆகியோர் கூட்டத்திற்குள் புகுந்து மெஸ்சியை மீட்டு வந்துள்ளனர். லயனல் மெஸ்சி அர்ஜென்டினா அணியின் கேப்டன் ஆவார்.  ரிவர்பிளேட் அவரது தாய்நாட்டை சேர்ந்த அணி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close