Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.சி.சி. விருது : ஸ்டீவன் ஸ்மித், டி வில்லியர்ஸ் கைப்பற்றினர் !

ந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்துக்கு  கவுரவமிக்க  கேரி  சோபர்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதே ஸ்டீவன் ஸ்மித்துக்குதான் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ்,  சிறந்த ஒரு நாள் போட்டி வீரருக்கான விருதை  தட்டிச் சென்றுள்ளார். இந்த விருதை இவர் 2வது முறையாக பெறுகிறார்.

ஜோகனஸ்பர்க்கில் நடந்த டி20 ஒருநாள் போட்டியில்,  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 56 பந்துகளில் 116 ரன்கள் விளாசிய டுப்லெசிக்கு சிறந்த டி20 வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஜோஸ் ஹேசில்வுட்டுக்கு சிறந்த இளம் வீரருக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது.

மகளிரை பொறுத்தவரை, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லேன்னிங்  சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர்,  சிறந்த டி 20 வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close