Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படும் கால்பந்து வீரர்கள்!

ல்சல்வாடார் அணிக்காக 83 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ள அல்ஃபிரடோ பாச்சிகோ அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தலைநகர் சான் சல்வாடர் பகுதியில் இருந்து 76 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, சாந்தா அனா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அல்ஃபிரேடோவுடன் இந்த சம்பவம் நடந்த போது இரு நண்பர்களும் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை.

எல்சல்வாடார் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் வரை 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாச்சிகோ எல்சல்வாடார் அணிக்காக 83 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த நாட்டு அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமைக்குரியவர்.

சர்வதேச அளவில் இந்த மாதத்தில் கொல்லப்படும் இரண்டாவது கால்பந்து வீரர் ஆவார். இந்த மாத தொடக்கத்தில் ஹோண்டுராஸ் வீரர் அர்னால்ட் பெரல்டா கொலை செய்யப்பட்டார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close