Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேரம் பால், ட்ரிஃப்டர் ரகசியம் சொல்கிறார் அஸ்வின்!

இந்த வருடத்தின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தான். பந்துகள் எகிறும் அந்நிய பிட்ச்களாக இருந்தாலும் சரி, சுழற்பந்துக்கு சாதகமான இந்திய பிட்ச்களாக இருந்தாலும் சரி அஸ்வின் தான் கில்லி. வெளிநாட்டு வீரர்கள் அஸ்வின் பந்தை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறுவதற்கு முக்கிய காரணம் அவரது பந்து வீச்சின் துல்லியமும், கேரம் பால் ரகசியமும் தான். 
 
டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் 2வது இடம், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் என இந்த வருடம் அஸ்வின் கிராஃப் அல்டிமேட். தற்போது உள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வின் தான் பெஸ்ட் என்கிறார் இந்திய கேப்டன் விராட் கோலி, அதுவும் உண்மைதான் வார்னே, கும்ப்ளே, முரளிதரன் என வரிசையாக ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்திய கிரிக்கெட்டில் அவர்களது ஓய்வுக்கு பின் ஸ்பின்னர்கள் பெயர் பெரிதாக வெளிவரவில்லை. அஸ்வின் அந்த வரிசை இடத்தை தற்போது பிடித்துள்ளார்.
 
பிசிசிஐ வீடியோவில் தனது கேரம் பால், ட்ரிஃப்டர் பந்து வீச்சு முறை பற்றி விளக்கமாக கூறியுள்ளார். ஒரு ஸ்பின்னராக தனது அணுகு முறை பற்றியும், பந்துவீச்சில் உள்ள டெக்னிக் குறித்தும் கூறுகிறார் தமிழக வீரர் அஸ்வின்.

 

 

http://www.bcci.tv/videos/id/1735/r-ashwins-coaching-manual

Posted by Ashwin Ravi on 28 December 2015

எடிட்டர் சாய்ஸ்

MUST READ