Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கட்டலான் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து : பார்சிலோனாவில் இணைந்த சில மணி நேரத்தில் நீக்கப்பட்ட வீரர்!

ட்டலான் மாகாணம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தினை ட்விட்டரில் வெளியிட்ட காரணத்தினால், பார்சிலோனா அணியில் இணைந்த சில மணி நேரத்தில் செர்ஜி கார்டியாலா என்ற கால்பந்து வீரர் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ரியல்மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கிடையேயான எல்கிளாசிகோ மோதலின் போது, 'ஹாலா மாட்ரிட் 'என்று கடந்த இரு விண்டுகளுக்கு முன் செர்ஜி ட்விட் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் பார்சிலோனா' பி 'அணிக்காக செர்ஜியோ கார்டியாலா ஒப்பந்தம் செய்யப்பட்டர். இதற்கிடையே  கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு செர்ஜி கார்டியாலா மாட்ரிட் அணிக்கு ஆதரவாக வெளியிட்ட ட்விட்டர் கருத்தும்  பார்சிலோனா மற்றும் கட்டலான் மாகாணம் குறித்தும் அவர் வெளியிட்டிருந்த  சர்ச்சைக்குரிய கருத்துக்களும் பார்சிலோனா அணியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து மதியம்  பார்சிலோனா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர், மாலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து 24 வயது செர்ஜி கூறுகையில், ''எனது நண்பர் ஒருவர் எனது செல்போனை வாங்கி, இவ்வாறு கருத்தினை வெளியிட்டு விட்டார். இது எது தவறல்ல. எனினும் பார்சிலோனா அணியின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினை பொறுத்த வரை, ரியல்மாட்ரிட் அணி மாட்ரிட் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. பார்சிலோனா கட்டலான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். நீண்ட நாட்களாக ஸ்பெயினில் இருந்து கட்டலான் மாகாணத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை இருக்கிறது. இதனால்தான் பார்சிலோனா - ரியல்மாட்ரிட் அணிகள் மோதும் ஆட்டம் அனல் பறக்கும் விதத்தில் இருக்கும்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close