Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கே ' நடுவருக்கு லைசென்ஸ் ரத்து : துருக்கி கால்பந்து சங்கத்துக்கு அபராதம்

ன்னை ஹோமோசெக்சுவல் என்று அறிவித்த,  கால்பந்து நடுவரின் லைசென்சை ரத்து செய்த துருக்கி கால்பந்து சங்கத்துக்கு 5.32 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

துருக்கி கால்பந்து நடுவரான ஹலில் இப்ராஹிம்,  கடந்த 2009-ம் ஆண்டு  தன்னை' ஹோமோசெக்சுவல்' என்று பகிரங்கமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து துருக்கி கால்பந்து சங்கம் அவரது நடுவர் லைசென்சை ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஹலில் இப்ராஹிம்,  இஸ்தான்புல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனக்கு இழப்பீடாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் துருக்கி லிரா தர வேண்டுமெனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். நீதிமன்ற விவாதத்தின்போது, துருக்கியில் ஹோமோசெக்சுவல் மற்றும் லெஸ்பியன்களுக்கு தொடர் மிரட்டல்கள் வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஹலில் இப்ராஹிமின் லைசென்சை ரத்து செய்ததற்காக  துருக்கி கால்பந்து சங்கத்துக்கு 23 ஆயிரம் துருக்கி லிரா (இந்திய மதிப்பில் 5.23 லட் ரூபாய்) அபராதமாக விதிக்கப்பட்டது. இதற்கு முன் ஹலில் இப்ராஹிம் துருக்கி ராணுவத்தில் பணியாற்றியதாகவும், அவர் ஹோமோசெக்சுவல் பழக்கமுடையவர் என்பதால் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அதே முறையேதான் தாங்களும் கடைபிடிப்பதாகவும் துருக்கி கால்பந்து சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த தீர்ப்பு குறித்து ஹலில் இப்ராஹிம் கூறுகையில், ''எனது பெயர் தலைப்பு செய்திகளில் அடிபட்டதில் இருந்து யாரும் எனக்கு வேலை கொடுக்க முன்வரவில்லை. எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. வாழ்வாதாரத்துக்கே சிரமப்பட்டேன் ''என்றார்.

துருக்கியை பொறுத்தவரை, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக ராணுவத்தில் இணைய வேண்டும். உடல் நிலை பாதிப்புக்குள்ளானவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஹோமோ செக்சுவல்களுக்கு மட்டுமே ராணுவ பணியில் இருந்து விதிவிலக்கு உண்டு. அந்த வகையில்தான் ஹலில் இப்ராஹிம் தன்னை பகிரங்கமாக 'கே' என்று அறிவித்ததையடுத்து, ராணுவ பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ