Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்சிலோனாவுக்காக 500 போட்டிகளில் பங்கேற்று லயனல் மெஸ்சி சாதனை!

பார்சிலோனா அணிக்காக நேற்று தனது 500வது போட்டியில் களமிறங்கினார் லயனல் மெஸ்சி.  ஸ்பானீஷ் லீக்கில்,  ரியல் பெடிஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணிக்காக 425 கோல் அடித்தும் அவர் சாதனை புரிந்தார்.

பார்சிலோனாவின் கேம்ப்நியூ மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் 29வது நிமிடத்தில்,  ரியல் பெடிஸ் அணி ஒரு சேம்சைட் கோல் அடித்தது. தொடர்ந்து 33-வது நிமிடத்தில் லயனல் மெஸ்சி அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார்.

பார்சிலோனா அணிக்காக மெஸ்சி அடிக்கும் 425 -வது கோல் இதுவாகும். தொடர்ந்து சவுரஸ் 46 மற்றும் 83- வது  நிமிடத்தில் இரு கோல்கள் அடித்தார். இறுதியில் பார்சிலோனா அணி,  4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பார்சிலோனா அணிக்காக அதிக போட்டியில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் மெஸ்சி,  தற்போது 6வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் அந்த அணியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட சேவி ஹெர்னான்டஸ்,  767 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.

தற்போது ஸ்பானீஷ் லீக்கில்,  பார்சிலோனா அணி 38 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அத்லெடிகோ மாட்ரிட் அணி, 17 ஆட்டங்களில் 38 புள்ளிகள் ஈட்டி 2வது இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் 36 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ