Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரிக்கெட் உலகில் பந்து பறித்த முதல் இந்திய உயிர்: ராமன் லம்பா பற்றிய சில தகவல்கள்!

ந்திய கிரிக்கெட் உலகை அதிர வைத்த இந்த துர் சம்பவம் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி நிகழ்ந்தது.  மிகச்சிறந்த பீல்டரான ராமன் லம்பாவிடம் ஒரு கெட்ட பழக்கமும் இருந்தது. அதாவது பேட்ஸ்மேனுக்கு வெகு அருகில்,  ஹெல்மெட் போடாமல் பீல்டிங் செய்யும் அந்த பழக்கம்தான் அவரது உயிரையும் பறித்தது.

டாக்காவில்,  அபாகானி கிரிரா சக்ரா அணிக்காக ராமன் லம்பா விளையாடி வந்தார். வங்க தேச பிரீமியர் டிவிஷன் இறுதி ஆட்டத்தில்,  முகமதன் ஸ்போர்ட்டிங் அணியுடன் ராமன் லம்பாவின் அணி மோதியது. முகமதன் ஸ்போர்ட்டிங் பேட்ஸ்மேன், மெக்ராப் ஹொசைன் அடித்த பந்து, ஃபார்வட் லெக் திசையில் நின்றிருந்த ராமன் லம்பாவின் தலையில் மின்னல் வேகத்தில் தாக்கியது. அடுத்த நிமிடமே ராமன் லம்பாவுக்கு நினைவு தப்பியது. கோமா நிலையை அடைந்த அவருக்கு  டாக்காவில் உள்ள மருத்துவமனையிலேயே தீவிர சிசிக்சை அளிக்கப்பட்டது.
 

டெல்லியின் இருந்து கூட சிறப்பு நரம்பியல் மருத்துவர்கள் டாக்கா மருத்துவமனைக்கு சென்று ராமன் லம்பாவை காப்பாற்ற முயற்சித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் 3 நாட்கள் கழித்து மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது. ராமன் லம்பாவிற்கு முன்னரே 5 கிரிக்கெட் வீரர்கள் பந்து தாக்கி பலியாகியிருந்தாலும், இந்திய கிரிக்கெட் வீரர் என்பதால் ராமன் லம்பாவின் மரணம் இந்திய ரசிகர்களை கடும் வேதனைக்குள்ளாக்கி விட்டது.

ராமன் லம்பா: சில தகவல்கள்...

கடந்த 1960-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி மீரட் நகரில் ராமன் லம்பா பிறந்தார்.

1980ம் ஆண்டு ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.

1986-ம் ஆண்டு கான்பூரில் இலங்கை அணிக்கு எதிராக ராமன் லம்பா இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். ஆனால் இந்த தொடரில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 102 ரன்களை லம்பா எடுத்துள்ளார்.

இதே ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கினார் லம்பா.  முதல் ஆட்டத்திலேயே 64 ரன்கள் எடுத்தார். 6வது ஆட்டத்தில் 102 ரன்கள் அடித்தும் அசத்தினார். இந்த தொடரில் மொத்தம் 278 ரன்களை லம்பா எடுத்தார். இதில் இரு அரை சதங்களும் அடங்கும். சராசரி 55.60 ஆகும். தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

ஒருநாள் போட்டிகளில் இந்திய அதிரடி வீரர் ஸ்ரீகாந்துக்கு நல்ல தொடக்க ஜோடியாக லம்பா இருந்தார். ஸ்ரீகாந்த் மட்டையை விளாசினால், லம்பா ஸ்ட்ரோக் செய்தே பவுண்டரி அடித்து அசத்துவார்.

அயர்லாந்து அணிக்காக அதிகாரபூர்வமற்ற போட்டிகளில் ராமன் லம்பா விளையாடியுள்ளார். 

ராமன் லம்பாவின் மனைவி கிம், அயர்லாந்தை சேர்ந்தவர். கடந்த 1990-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு ஜாஸ்மின், கம்ரான் என இரு குழந்தைகள். லம்பாவின் மரணத்துக்கு பின், கிம் போர்ச்சுகல் நாட்டில் குடியயேறி விட்டார்.

ராமன் லம்பா 121 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி,  8 ஆயிரத்து 776 ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணிக்காக 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 783 ரன்களை எடுத்துள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ