Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சல்யூட் சார்... பதான்கோட் மோதலில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீரர் வீர மரணம் !

தான்கோட் விமானப்படைத் தளத்தில் ஜெய்ஸ்- இ - முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதிலடியில் விமானப்படைத் தளத்துக்குள் நுழைந்த 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் , 7 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.

அதில் காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற பதேக் சிங்கும் ஒருவர்.  கடந்த 1995ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றவர். அந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் அணியில் மூத்த வீரர் இவர்தான்.

தற்போது 51 வயதுதான பதேக் சிங், ராணுவத்தில் சுபைதார் மேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படையில் இணைந்தார். இவருக்கு மதுபாலா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close