Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் சதங்கள் அடித்து ஆஸ்திரேலிய அணி சாதனை!

ஸ்திரேலிய அணியின்  138 ஆண்டு கால டெஸ்ட்  கிரிக்கெட் வரலாற்றில் ஒட்டு மொத்தமாக ஆயிரம் சதமடித்து புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 

கடந்த டிசம்பரில்  நடைபெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு  எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  ஆஸ்திரேலிய அணியின் க்ஹவாஜா சதமடித்தார். இந்த சதம்தான் ஆஸ்திரேலிய வீரர்களால் அடிக்கப்பட்ட ஆயிரமாவது சதம் ஆகும். அந்த வகையில் கிரிக்கெட் உலகில் ஆயிரம்  சதங்கள்  அடித்த முதலாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றது.

கடந்த 1877ஆம் ஆண்டு முதல்  கிரிக்கெட் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, இந்த சாதனையை புரிவதற்கு 1725 போட்டிகளும், 21460 இன்னிங்ஸ்களும் தேவைப்பட்டது.  இந்த ஆயிரம் சதங்களை 489 வீரர்கள் அடித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்த் அணி 964 சதங்களோடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இது வரை 1704 போட்டிகளில் விளையாடி உள்ள அந்த அணியில் , 715 பேர் இந்த சதங்களை அடித்துள்ளனர்.

இந்திய அணி இதற்கு அடுத்தப்படியாக 688 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 1932 ஆம் ஆண்டு முதல்  கிரிக்கெட் விளையாடி வரும் இந்திய அணி இதுவரை 1443 போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்திய அணியில் 339  வீரர்கள் சதமடித்துள்ளனர்.

மேற்கு இந்திய தீவுகள் (629), பாகிஸ்தான்(543), தென்னாப்பிரிக்கா (501), இலங்கை(393), நியூ சிலாந்து(377), மற்றும் ஜிம்பாப்வே(107) ஆகிய அணிகள் இது வரை ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் உலகில் நூறு சதங்களை கடந்த அணிகளாகும்.    


எஸ்.கே பிரேம் குமார்
(மாணவ பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ