Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏழே மாதத்தில் பெனிட்சின் பதவி பறிப்பு : ரியல்மாட்ரிட் பயிற்சியாளராக சிடேன்!

ரியல்மாட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளராக சினடேன் சிடேன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சீசன் தொடக்கத்தில் அந்த அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரஃபேல் பெனிட்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சீசனில் எந்த கோப்பையையும் வெல்ல முடியாத நிலையில்,  ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக இருந்த கார்லோ அன்சாலெட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் பெனிட்ஸ், ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கடந்த ஜுன் மாதம் 3 ஆண்டுகளுக்கு அவர், ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் பெனிட்சின் பதவி வெறும் ஏழே மாதத்தில் பறிக்கப்பட்டுள்ளது. 

ஸ்பானீஷ் லீக் உள்ளிட்ட தொடர்களில் ரியல்மாட்ரிட் அணி  தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.பார்சிலோனாவிடம் 4-0 , செவியாவிடம் 3-2 , வில்லாரியலிடம் 1-0 என்ற கோல் கணக்கிலும் ரியல்மாட்ரிட் தோல்வி கண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக' கோபா டெல்ரே' தொடரில் கார்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தடை செய்யப்பட்டிருந்த டெனிஸ் செரியஸேவை களமிறக்கி தவறு செய்தார் பெனிட்ஸ்.

இதனால் நடப்பு சீசனில்,  கோபா டெல்ரேவில்  விளையாட ரியல்மாட்ரிட் அணிக்குத் தடை விதிக்கப்பட்டு தொடரை விட்டு வெளியேற்றப்பட்டது. கடைசியாக ஸ்பானீஷ் லீக்கில் வாலென்சியா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ரியல்மாட்ரிட் அணியால் வெற்றி பெற முடியவில்லை. மெஸ்டல்லாவில் நடந்த இந்த ஆட்டம் 2- 2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.

தொடர் தோல்விகளையடுத்து,  பெனிட்சின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ரியல்மாட்ரிட் அணியின் துணைப் பயிற்சியாளராக இருந்து வந்த சினடேன் சிடேனை புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது 45 வயதான சிடேன் ரியல்மாட்ரிட் அணிக்காக கடந்த 2001 -ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். இத்தாலியின் புகழ்பெற்ற யுவான்டஸ் அணிக்கும் சிடேன் நீண்டகாலமாக விளையாடியவர். இவரது தலைமையில்தான் பிரான்ஸ் கடந்த 1998-ம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2000-ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பையை வென்றது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ