Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே இன்னிங்சில் 1000 ரன்கள் அடித்து மும்பை வீரர் உலக சாதனை!

கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு வீரராலும் நிகழ்த்த முடியாத சாதனையை மும்பையை சேர்ந்த வீரர் ஒருவர் நிகழ்த்தியுள்ளார்.

மும்பை கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஹெச்.டி பண்டாரி கோப்பைக்கான பள்ளி அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் நேற்று கே.சி காந்தி பள்ளி அணியுடன் ஆரிய குருகுல அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கே.சி. காந்தி பள்ளி அணி வீரர் பிரணவ் தாணவாடே ஒரே இன்னிங்சில், 1009 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். இதற்கு 323 பந்துகளே தேவைப்பட்டது. இவரது 1000 ரன்களில் 129 பவுண்டரிகளும் 59 சிக்சர்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 312.38 ஆகும்.

கிரிக்கெட் உலகின் எந்த காலக்கட்டத்தில் எந்த ரூபத்திலும்  நிகழ்த்தப்படாத சாதனை இது. இதே வீரர்தான் ஏற்கனவே ஒரே இன்னிங்சில் 199 பந்துகளில் 652 ரன்கள் ஒரே இன்னிங்சில் அடித்து  உலக சாதனை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஒரே இன்னிங்சில் கே.சி. காந்தி பள்ளி அணி 1,465 ரன்கள் எடுத்தது. இதுவும் ஒரு உலக சாதனைதான்.

தற்போது 15 வயதான பிரணவின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர் . இது குறித்து பிரணவ் கூறுகையில்,'' 900 ரன்களை கடந்ததில் இருந்து எனக்கு கொஞ்சம் பதற்றம் இருந்தது. எனினும் சாதித்து விட்டேன்'' என்றார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close