Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் பணக்கார கால்பந்து அணிகளுக்கு இப்போது இவர்கள்தான் குருநாதர்கள்!

கிளப் கால்பந்து வரலாற்றில் பார்சிலோனா ரியல்மாட்ரிட் அணிகளுக்கிடையேயான 'எல்கிளோசிகோ 'மோதல் பிரசித்தி பெற்றது. ஸ்பெயினில் கட்டலான் மாகாணத்தை பிரித்து தனிநாடாக்க வேண்டுமென்ற கோரிக்கை வலு பெற இந்த 'எல்கிளாசிகோ' மோதலும் ஒரு காரணமாக நிச்சயமாக இருக்கும்.

 எல்கிளாசிகோவில் பார்சிலோனா வெற்றி பெற்று விட்டால் அன்று அந்த நகரமே அல்லலோப்படும். உடனடியாக நகரில் குவியும் லட்சக்கணக்கான மக்கள், கட்டாலானை பிரித்து தர வேண்டுமென்று கோஷம் எழுப்புவார்கள். மொத்தத்தில் ஸ்பெயின் அரசியலே எல்கிளாசிகோ மோதலால் அலறும்.

அதேவேளையில் ரியல் வெற்றி பெற்று விட்டால்,' ஹாலா மாட்ரிட் ' என்ற கோஷம் எழும்பும். எனினும் சமீப காலமாக பார்சிலோனா முன் ரியல் மாட்ரிட்டின் ஆட்டம் எடுபடவில்லையென்றே சொல்ல வேண்டும். அண்மையில் நடந்த எல்கிளாசிகோ மோதலில் கூட, பார்சிலோனா ரியலை 4-0 என்ற கோல் கணக்கில்  துவம்சம் செய்து விட்டது.

ஆட்டத்தில் மட்டும் அனல் பறப்பது இல்லை. களத்திலும் இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது, டைவ் அடிப்பது, எதிரணி வீரர்களை  கணுக்காலை பதம் பார்ப்பது என்ற  கால்பந்தில் தடை செய்யப்பட்ட அத்தனை விஷயங்களும் எல்கிளாசிகோ மோதலில் அரங்கேறுவது வழக்கம்.

தற்போது பார்சிலோனா அணியின் பயிற்சியாளராக லூயீஸ் என்ரிக் உள்ளார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பார்சிலோனாவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஸ்பெயின் அணிக்காக 65 போட்டிகளில் விளையாடியுள்ள என்ரிக், பார்சிலோனா அணிக்காக 207 போட்டிகளில் விளையாடி 73  கோல்களை அடித்துள்ளார்.

லூயீஸ் என்ரிக்  விளையாடிய காலக்கட்டத்தில்தான் ரியல்மாட்ரிட் அணிக்காக சினடேன் சிடேன் விளையாடினார்.அந்த சமயத்தில்' எல்கிளாசிகோ' மோதலில் இந்த இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளாத குறைதான். அந்த அளவுக்கு மைதானத்தில் மோதல் இருக்கும்.

இந்நிலையில் ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக சினடேன் சிடேன் பொறுப்பேற்றுள்ளார். களத்தில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட, இவர்கள் கையில் இப்போது, உலகின் பணக்கார கால்பந்து அணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் ஸ்பெயினின் முன்னணி 4  கிளப்புகளுக்குஒரே காலக்கட்டத்தில் விளையாடிய 4 நட்சத்திர வீரர்கள் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளனர்.  ரியலுக்கு சிடேனும், பார்சிலோனாவுக்கு என்ரிக்கும் அத்லெடிகோ மாட்ரிட்டுக்கு சிமியோனும் வாலென்சியாவுக்கு மான்செஸ்டர் யுனைடெட்டின்
கேரி நெவிலியும் பயிற்சியாளர்களாக உள்ளனர்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ