Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அபராதத்துடன் தப்பித்தார் கெயில்!

பார்ட்டி கொண்டாடுவதில் சளைக்காத கிறிஸ் கெயில், மைதானத்தில் இதுவரை பெரிய அளவிலான சர்ச்சையில் சிக்கியது கிடையாது. ஆனால் தற்போது பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் கண்ணியக்குறைவாக நடந்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.

பிக்பேஷ் தொடரில் விளையாடி வரும் கெயிலை சேனல் 10 செய்தியாளர் மெல் மெக்லாலின் பேட்டியெடுத்தார், அப்போது கெயில், ''நான் உங்கள் கண்களை பார்க்கவே பேட்டியளிக்கிறேன் என்றும் ''பின்னர் நாம் சேர்ந்து மது அருந்தலாம்'' என்றும் ''வெட்கப்படாதே பேபி ''என கூற, அது அப்படியே நேரடியாக ஒளிபரப்பானதால்,  ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. பொது இடத்தில் அநாகரீகமாக பேசியதற்காக கெயிலுக்கு கடும் கண்டனமும் குவியத் தொடங்கியது.

கெயில் விளையாடி வரும்  மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணி, கெயிலுக்கு 10 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை அபராதமாக விதித்தது. இந்த தொகை மெக்ரத் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்றும் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அறிவித்துள்ளது. 

இந்த விவகாரத்தில் கிறிஸ் கெயிலும் மன்னிப்பு கேட்டடுக் கொண்டார். தான் காமெடிக்காக சொன்னதாகவும், தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதும் என்றும் விளக்கமளித்தார்.

இதற்கிடையே கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் இது குறித்து கூறுகையில், '' கெயில் இடம் பெற்றுள்ள அணி தரப்பில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு விட்டது. கடந்த 4,5 வாரங்களாக பிக் பேஷ் தொடரில் அவர் விளையாடி வருகிறார். இதுவரை எந்த தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதனால்தான் அபராத முடிவை எடுத்துள்ளோம்''  என்றார். 

எனினும் இன்னொரு முறை இது போன்ற தவறை கெயில் இழைத்தால், அவரை அடுத்த பிக் பேஷ் தொடரில் இருந்து  நீக்கும்  எண்ணமும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு உள்ளதாம்.

இதற்கிடையே உலகக் கோப்பை போட்டியின் போது  டிரெஸ்சிங் அறையில் ஆஸ்திரேலிய பெண் ஒருவரிடம் தவறாக நடந்ததாக கெயில் குறித்து செய்தி வெளியிட்டிருந்த ஃபேர் பாக்ஸ் மீடியா மீது கெயில் மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக கெயில் அறிவித்துள்ளார்.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ