Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹாசிம் ஆம்லா இந்த 3 காரணங்களுக்காகதான் பதவி விலகினாரா?

டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக விளங்கிய தென்னாப்பிரிக்க அணி,  சமீபத்தில் தொடர் தோல்விகளை சந்தித்தது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் ஹாசிம் ஆம்லா,  தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். டெஸ்ட் கேப்டனான ஆம்லா, திடீரென கேப்டன் பதவியிலிருந்து விலக 3 காரணங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.


தொடர் தோல்விகள்!

அசைக்க முடியாத அணியாக இருந்த தென்னாப்பிரிக்க அணி,  ஒன்பது ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை இழக்காமல் கெத்தான அணியாக வலம் வந்தது. இந்தியாவில் ஒருநாள், டி20 தொடரை வென்று டெஸ்ட்டை வெல்லும் முனைப்போடு களமிறங்கியது. கோலி தலைமையிலான இந்திய அணி,  தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வென்றது. பெங்களூரு டெஸ்டில் மழை வந்து காப்பாற்றியது; ஒருவேளை அதிலும் தோற்றிருந்தால் ஒயிட் வாஷ்தான். அதன்பின் இங்கிலாந்துடனான முதல் டெஸ்டில் தோல்வி என தென்னாப்பிரிக்காவை தோல்வி துரத்தி வந்தது. இந்த தொடர் தோல்விகள் ஆம்லாவின் திடீர் முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


மோசமான ஃபார்ம்!

ஹாசிம் ஆம்லாவின் கேப்டன் பதவி, அவரது பேட்டிங்கை பெரிதும் பாதித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய தொடரில் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாருமே சிறப்பாக ஆடவில்லை என்பதை தாண்டி,  ஆம்லாவின் பங்களிப்பு இல்லாதது அணியை பெரிதும் பாதித்தது. கடந்த 2015-ம் ஆண்டு 12 இன்னிங்ஸ்களில்,  வெறும் 251 ரன்களை மட்டுமே ஹாசிம் ஆம்லா அடித்துள்ளார். சராசரி 22.81 ஆகும். கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியாமலும், அதே நேரத்தில் பேட்ஸ்மேனாக சரியான ஆட்டத்தை ஆட முடியாமலும் திணறி வந்தததை அவரே தனது பேட்டியில் கூறியுள்ளார். அதனால் இவரது இந்த முடிவுக்கு பின்னால் இந்த ஃபார்மும் காரணமாக இருந்திருக்கக்கூடும்.


 கேப்டன்கள் vs  கேப்டன்!

தென்னாப்பிரிக்க அணி மூன்று வடிவிலான போட்டிகளிலும்,  3 கேப்டன்களை கொண்டு செயல்படுகிறது. டிவில்லியர்ஸ், டுப்ளெஸிஸ் என இருவரும் அக்ரஸிவான கேப்டன்கள்.  கேப்டன் கூலான ஆம்லாவின் கீழ் ஆடுவதில் அவர்களுக்கு பிரச்னை இல்லை என்றாலும், களத்தில் டிவில்லியர்ஸ், டுப்ளெஸிஸ் இருக்கும் போது ஆம்லாவின் கேப்டன்ஸி கண்களுக்கு தெரிவதே இல்லை என்பதுதான் நிஜம். அவர்களின் ஆட்டத்திறனை களத்தில் வெளிப்படுத்துவதற்கு,  அக்ரஸிவான கேப்டன் இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவே. தோனி, கோலியை கையாளுவது போல ஆம்லாவால் கையாள முடியவில்லை என்பதுதான் உண்மை. இதனை மனதில் கொண்டு கூட ஆம்லா,  டெஸ்ட் கேப்டன் பதவியை துறந்திருக்கலாம். 

ஆம்லா ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவரது ஆட்டம் தென்னாப்பிரிக்க அணிக்கு மிகவும் தேவை என்பதால் அவரது முடிவை அணி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது, டிவில்லியர்ஸை அடுத்து வரும் போட்டிகளுக்கு கேப்டனாக்கியுள்ளது. டி20  உலகக் கோப்பை, இங்கிலாந்து தொடரில் ஆம்லா கலக்குவார் என்ற நம்பிக்கையுடன் கேப்டன் ஆம்லாவுக்கு குட்பை சொல்லலாம்.

வெல்கம் பேக் பேட்ஸ்மேன் ஆம்லா!

ச.ஸ்ரீராம்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close