Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆயிரம் ரன்களும் சில சர்ச்சைகளும்!

மும்பையை அடுத்த கல்யாணில் நடந்த பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர்) கே.சி.காந்தி மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரணவ் தனவாடே 1,009 ரன்கள் குவித்து அசத்தினார். ஒரே நாளில் உலகம் முழுக்க பாப்புலராகி விட்ட பிரணவுக்கு சச்சினே தனது கையொப்பமிட்ட, கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கியுள்ளார். கிரிக்கெட் உலகமே வியந்த பிரணவின் அசத்தல் பேட்டிங் குறித்து தற்போது சிலர் கேள்வி எழுப்புயுள்ளனர்.

மைதானத்தில் ஸ்கொயர் லெக்’ பகுதியில் பவுண்டரிக்கான தூரம் வெறும் 30 யார்டு (27 மீட்டர்) மட்டுமே இருந்தது. சர்வதேச போட்டியில் குறைந்தது 59.43 மீட்டர் தூரம் எல்லைக் கோடு அமைந்திருக்க வேண்டும்.
எதிரணியான ஆர்யா குருகுல் அணி 16 வயதுக்குட்பட்டோர் விளையாட வேண்டிய இந்த போட்டியில், 12 வயது வீரர்களை களம் இறக்கி இருக்கிறார்கள். ஆர்யா குருகுல் அணியின் பயிற்சியாளர் யோகேஷ் ஜக்தாப் இது குறித்து கூறுகையில், ''முன்னணி வீரர்கள் 6 வீரர்கள் பரீட்சை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியவில்லை. மேலும் 9 முன்னணி வீரர்களும் போட்டியில் இருந்து விலக நேரிட்டது. அணி விளையாடாமல் போனால், அடுத்த ஆண்டு எங்கள் பள்ளி அணி போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். அதனால் 12 வயதுக்குட்பட்டவர்களை சேர்த்து விளையாட வேண்டியதாகி விட்டது'' என்றார்.
கிரிக்கெட் பந்தில் விளையாடிய அனுபவம் ஆர்ய குரு குல 12 வயதுக்குட்பட்ட அணியினருக்கு இல்லை. அதுவரை டென்னிஸ் பந்தில் மட்டுமே விளையாடி வந்துள்ளனர். கடினமான கிரிக்கெட் பந்துக்கு அவர்கள் பயந்து போனார்கள். அத்துடன் பந்து வீசவும் சிரமப்பட்டு, ரன்களை வாரி வழங்கினராம்.
இதனால் சில கிரிக்கெட் நிபுணர்கள், பிரணவ் தனவாடேவின் இமாலய ரன் குவிப்பை குறை கூறியுள்ளனர்.
ஆனால் பிரணவின் பயிற்சியாளர் ஷர்மா ‘இதற்கு முன்பு இந்த மைதானத்தில் நிறைய ஆட்டங்கள் நடந்துள்ளன. எந்த வீரரும் இது போன்று ரன்கள் அடிக்கவில்லேயே ஏன் 300 ரன்கள் நின்று அடித்து காட்டட்டுமே? என்று சவால் விடுத்துள்ளார்.


எடிட்டர் சாய்ஸ்

MUST READ