Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்துக்கு ஸ்பெயின் தந்த டென்னிஸ் வீரர்... சென்னை ஓபனில் மிரட்டுகிறார்!

சென்னை ஓபன் தொடரில், அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள  21 வயதான  இளம் டென்னிஸ் நட்சத்திரம்  ராம் குமார் ராமநாதன் சென்னையை சேர்ந்தவர். இவர் சென்னையில் பிறந்து இருந்தாலும்,  வளர்ந்தது ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில்தான். பிறந்தது முதலே கையில் டென்னிஸ் மட்டையுடன் சுற்றுவதுதான் ராம்குமாரின் வழக்கம். அந்த வகையில் இளம் வயதில் ஸ்பெயினில் கிடைத்த டென்னிஸ் பயிற்சி, தற்போது ராம்குமார் ராமாநாதனை உரமாக்கியுள்ளது.

கடந்த சென்னை ஒபனில் முதல் சுற்றிலேயே  வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்த ராம் குமார், இந்த சென்னை ஓபனில் வெளுத்து வாங்குகிறார். உலக தரவரிசையில் 248-ம் இடத்தில உள்ள ராம்குமார், முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில்  98-வது  இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் டேனியலை எதிர்கொண்டு வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில்,  ரஷ்ய வீரர் அலெக்சாண்டரை சின்னாபின்னமாக்கி காலிறுதிக்கு முன்னேறினார் ராம்குமார்.

 ஆனால் காலிறுதியில்தான் ராம்குமார் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. காலிறுதியில் இன்று இவர் தரவரிசையில் 45வது இடத்தில் உள்ள, பிரிட்டன் வீரர் அல்ஜஸ் பெடனை சந்திக்கிறார். எனினும் சொந்த மைதானத்தில் விளையாடுவதும்,  சென்னை ரசிகர்களின் உற்சாகக்குரலும் ராம்குமாரை கரையேற்றி விடுமென்று டென்னிஸ் ரசிகர்கள் நம்புகின்றனர்.
 


தற்போது சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. படித்து கொண்டிருக்கும் ராம்குமாருக்கு,  கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வெல்வது மற்றும் டேவிஸ் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்துவது என சில லட்சியங்கள் இருக்கிறது. அதற்கு சென்னை ஓபன் வெற்றி உதவிகரமாக அமையும்.

-எஸ்.கே பிரேம் குமார்
(மாணவ பத்திரிக்கையாளர்)

படங்கள்: பா.காளிமுத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close