Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோனிக்கு ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட்!

ர்த்தக இதழ் ஒன்றில் , இந்து கடவுள்  விஷ்ணு போல தோனி கையில் காலணி ஒன்றுடன் இருப்பது போன்ற  அட்டைப்படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. ‘God of Big Deals’  என்ற பெயரில் கட்டுரையையும் அந்த வர்த்தக இதழ் வெளியிட்டிருந்தது. 

இந்த விளம்பரம் இந்து கடவுளை அவமதிப்பது போலவும் இந்து மக்களின் மதஉணர்வுகளை புண்படுத்துவது போலவும் இருப்பதாக கர்நாடகா, ஆந்திர மாநில நீதிமன்றங்களில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.அந்த வகையில்  இந்து அமைப்பை சேர்ந்த ஷ்யாம் சுந்தர்  என்பவர் அனந்தப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து தோனிக்கு,  ஆந்திர பிரதேச மாநிலம் அனந்தப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தோனி நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்த்தார். இதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை நீதிமன்றமே பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக  வழக்கு தொடர்ந்த ஷ்யாம் சுந்தர் கூறுகையில், ''ஏற்கனவே நீதிமன்றம் அனுப்பிய சம்மனை தோனி வாங்க மறுத்து விட்டார். இதையடுத்தே தற்போது நீதிமன்றம் இந்த விஷயத்தை சற்று கடினமாக கையாண்டுள்ளது'' எனக்  கூறியுள்ளார்.

தற்போது தோனி தலைமையிலான இந்திய அணி,  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 25-ம் தேதி தோனி,  நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையென்றால் கைது செய்யப்படுவார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ