Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பார்ட்டி மேன் வாயை திறந்தால் 'டர்ட்டி மேன்'!

'சிக்சர் மன்னன்' கெயில்  இன்று கிரிக்கெட் உலகின் சர்ச்சை நாயகன். பெண் செய்தியாளரிடம்  வழிந்து இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். களத்தில் கூலாக இருக்கும் கெயிலுக்கு வெளியில் வேறு விதமான முகம் உண்டு. ஆனால் இதுவரை பார்ட்டி மேனாக மட்டுமே இருந்து வந்த அவர், ஓவர் வழிசலால் டர்ட்டி மேனாக மாறிவிட்டார்.

"தண்ணி அடிக்கலாமா பேபி"


 ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பேஷ் லீக்கில்  மெல்பர்ன்ரெனகேட்ஸ் அணிக்காக ஆடி வரும் கெயிலை 'நெட்வொர்க் டென்' பத்திரிக்கையைச் சேர்ந்த மெக்லாலின் என்ற பெண் செய்தியாளர் பேட்டியெடுத்தார். அப்போது கெயிலோ , "நானே  உங்களைப் பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். போட்டி முடிந்ததும் தண்ணி அடிக்கப் போலாமா?" எனச் சொல்லி சிரித்துவிட்டு, "வெட்கப்படாதே பேபி" என்றும் வழிந்திருக்கிறார்.

கெயிலின் இந்த வழிசல் அப்படியே ஏரில் செல்ல,  கிரிக்கெட் வீரர்கள் முதற்கொண்டு அத்தனை பேரும் அவரைத் திட்டி தீர்த்தனர், " இப்போது நான் விளையாட்டாகத்தான் கூறினேன். அது அவரை காயப்படுத்தினால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்." என்று பல்டி அடித்துள்ளார் சிக்சர் மன்னன்.  கெய்லின் வழிசல்  பேட்டியைக் காண இங்கே கிளிக் செய்யவும்

பெண் செய்தியாளர்களிடம் கெயில் வழிவது இது முதல் முறையல்ல. கடந்த  2011-ம் ஆண்டு ஃபாக்ஸ் ஸ்டார் பத்திரிக்கையை சார்ந்த நெரோலி மிடோவ்ஸ் என்ற பெண் செய்தியாளர்,  கெயிலை ஒரு கேள்வி கேட்க, "உங்கள் பார்வையால் என்னை சாய்த்து விட்டீர்கள். உங்கள் கேள்வியை திரும்பக் கேட்க முடியுமா?" என்று நக்கலாய் பேசி சிக்கலில் சிக்கியுள்ளார்.

9 நியூஸ் பத்திரிக்கையைச் சார்ந்த பெண் செய்தியாளரை,  ட்விட்டரில் நேரடியாகவே டேட்டிங்கிற்கு அழைத்துள்ளார் கெயில்.

கெயில் பார்ட்டி கொண்டாடியது வரை பிரச்னை இருந்தது இல்லை.ஆஸ்திரேலிய சம்பவத்தையடுத்து,  அவரை பற்றிய பலரும் உண்மையை உடைக்கத் தொடங்கியுள்ளனர். அது  'கெயில் ஒரு பெண் பித்தர் ' என்ற பாணியில் போகிறது.

 

  

ஆடையைக் கழற்றி அசிங்கம்

கடந்த  2015 -ம் ஆண்டு  கிரிக்கெட் உலகக்கோப்பையின் போது நடந்த அசிங்கத்தை சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது ஃபேர்ஃபேக்ஸ் பத்திரிக்கை. சிட்னியில் வீரர்கள் தங்கியிருந்த டிரெஸ்சிங் அறைக்குள் சென்ற பணிப் பெண்ணிடம்,  கெயில் அநாகரீகமான முறையில் நடந்துள்ளார். இதனை ஃபேர் ஃபேக்ஸ் பத்திரிகை இப்போது செய்தியாக வெளியிட்டுள்ளது.  இதனால் அதிர்ந்து போன  கெயில், அந்த பத்திரிகை மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகளின் போது நடந்த இரவு நேர பார்ட்டிகளில் கெயில் அடித்த கூத்திற்கெல்லாம் அளவே இல்லை. போதாதற்கு அவரது ரசிகையென்ற பெயரில்,  பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவுடன் கும்மாளம் அடிப்பதும் உண்டு. இருவரும் பார்ட்டிகளில் கெட்ட ஆட்டம் போட்டு,  இணையத்தில் அந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பின.

தொட்டால்தானே தெரியும்?

கடந்த  2014-ம் ஆண்டு  கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கெயில் ஜமைக்கா அணியின் கேப்டனாக இருந்தார். ஆன்டிகுவா அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது 'பிட்ச் ரிப்போர்ட்'  பற்றி கேட்ட பெண் செய்தியாளரிடம், "உங்களை இன்னும் நான் தொடவில்லையே. தொட்டால்தானே அதைப் பற்றிக் கூற முடியும்? " என்று அசிங்கமாகப் பேசியுள்ளார்.  கெய்லின் அந்த ஆபாசப் பேச்சைக் காண...


 

கொழும்புவில் கும்மாளம்

கொழும்புவில் ஒரு முறை  கெயிலும், சக வீரர்களான ரஸ்ஸல், எட்வார்ட்ஸ், டுவைன் ஸ்மித் ஆகியோர் குடித்துவிட்டு 3 இங்கிலாந்து  பெண்களோடு ஹோட்டல் அறையில் ஆட்டம் போட்டுள்ளனர். அந்த சமயத்தில்  ரெய்ட் நடத்திய இலங்கை போலீசாரிடமும் சிக்கி கொண்டனர். அதில் பெண்கள் கைது நடவடிக்கையை சந்திக்க நேரிட்டது. பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

 இன்ஸ்டாகிராம் கூத்துக்கள்

கெயில் பார்ட்டியிலும் கிரிக்கெட்டிலும் எப்படி பிசியோ, அதே போலவே  இன்ஸ்டாகிராமில் எப்போதும் பிசிதான். கடற்கரையில்  பிகினி உடை அணிந்த பெண்களோடு  கும்மாளம் போடுவது, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது கெயிலின் முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்று. இன்ஸ்டாகிராம் பெண்கள், ஒவ்வொரு முறையும் மாறிக்கொண்டே இருப்பார்கள். அந்தளவுக்கு தலைவர் ஒரு பிளேபாய். 

கெயில் சமீபத்தில் தனது வீட்டிலேயே 'ஸ்ட்ரிப் கிளப்' ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். ஸ்ட்ரிப் கிளப் இல்லாதவர்கள் கிரிக்கெட் வீரர்களே அல்ல என்று சொல்வது கெயிலின் வழக்கம்.

கிரிக்கெட் களத்தில் அடிக்கடி பல வீரர்களுடன் கெயில் மோதலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவையெல்லாம் கெயிலின் இமேஜுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. ஆஸ்திரேலிய  பெண் பத்திரிகையாளரிடம் அவர் நடந்து கொண்டவிதம், கெயிலின் இமேஜை ஒரே நாளில் டேமேஜ் செய்து விட்டது!

மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close