Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த இலக்கு, ஒலிம்பிக்கில் தங்கம்: அசத்தும் அபூர்வி சண்டேலா

ந்தியாவின்  ஒலிம்பிக் எதிர்பார்ப்புகள்  அதிகம் இருக்கும் போட்டிகள் பளு தூக்குதல், குத்துச்சண்டை மற்றும் அம்பு எய்தல். தற்போது தோன்றியிருக்கும் நம்பிக்கை நட்சத்திரம்தான் அபூர்வி சண்டேலா, 10 மீட்டர் ஏர் ரைஃபல் என்ற போட்டியில்  2012 முதல் பங்கேற்று வருகிறார்.

தான் பங்கேற்ற முதல் தேசிய அளவிலான சீனியர் போட்டியிலேயே தங்கம் வென்றார். பின்னர்  2014-ல் ஹேக்  இன்டெர்ஷூட் போட்டிகளில் தனி நபர், குழு என பல போட்டிகளில் பங்கேற்று 4 மெடல்கள் குவித்தார். அதே வருடம் கிளாஸ்கௌவில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் 206.7 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றது மட்டும் அல்லாமல் புது ரெக்கார்டும் உருவாக்கினார்.

சமீபத்தில் ஸ்வீடனில் நடைபெற்ற ஸ்வீடிஷ் கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டியில்  கலந்து கொண்ட ஆண் மற்றும் பெண் வீரர்களில் சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 23 வயதான இவர்,  ஏற்கனவே அடுத்த வருடம் நடக்கவிருக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி விட்டார்.  தென் கொரியாவில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் வெண்கல பதக்கம் வென்று, தன் ஒலிம்பிக் கனவிற்கு ஒரு படி நெருங்கினார். 2016 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான முதல் இந்திய பெண் இவர் தான்.

ஸ்வீடனில் நடந்த போட்டியில்,  நடப்பு சாம்பியனான சீனாவை சேர்ந்த யி சிலிங்கை தோற்கடித்து புது உலக ரெக்கார்ட் உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அபாரமான திறமையை பாராட்டி அவருக்கும் வால்தர் ரைஃபில் வழங்கப்பட்டது.

ஜெய்ப்பூரை சேர்ந்த இவர்,  சோஷியாலஜி படித்து கொண்டிருக்கும்போதே துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் கொண்டார்.

 2008-ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவை பார்த்தே ஏர் ரைஃபில் போட்டிக்கு பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். அவரை போலவே இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்ற நம்பிக்கை இந்த வெற்றியால் அதிகரித்து உள்ளது. அதற்காக தீவிரமாக உழைத்தும் வருகிறார்.  ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கும் மேல் துப்பாக்கி பயிற்சி, நீச்சல், உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார். தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே தங்கம் வெல்வதில் உறுதியாக உள்ளார்


வாழ்த்துகள் அபூர்வி!

ஐ.மா.கிருத்திகா
(மாணவர் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close