Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகின் நம்பர் 1 இடத்தை பிடித்த சிரில் வர்மா!

ந்தியாவின் சிரில் வர்மா,  பாட்மிண்டன் விளையாட்டில் உலகின் ஜூனியர் ஆண்கள் வரிசையில் நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளார். 13 வயதில், ஜூனியர் ஆசியா சாம்பியன்ஷிப் பட்டதை வென்ற இந்தியாவின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்று, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சிரில், அதே வருடத்தில் ஆசியாவின் பதினைந்து வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் சாம்பியன்ஷிப் பட்டம்
பெற்றார்.


2014 ல் தொடர்ந்து மூன்று நாட்களில், பத்து போட்டிகளில் பங்கேற்றதால் உடல் நலக்குறைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகும் தளராமல் போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை குவித்தார். கடந்த அக்டோபர் மாதம்,  தவறான வயதை கூறி ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட சிரில், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.  அதன் பிறகு குற்றச்சாட்டை பொய் என நிரூபித்தார். பெற்றோர் மற்றும் பயிற்சியாளரின் ஊக்குவிப்புடன், நவம்பர் மாதம் நடந்த ஜூனியர் உலக சாம்பியம்பியன்ஷிப் விளையாட்டில், இறுதிச் சுற்று வரை சென்று வெள்ளி வென்றார்.

தொடர்ந்து நன்றாக விளையாடி வந்தததனால், தர வரிசையில் முன்னேறிச் சென்று தற்போது முதல் இடத்தில் உள்ளார். சீனியர் பிரிவில் முதலிடம் பெறுவதே தனது குறிக்கோள் எனக் கூறும் சிரில்,  2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டு வருவதாகவும் கூறுகிறார். சீனியர் பிரிவில், முதல் முறையாக இந்த மாத இறுதியில் விளையாட இருக்கும் சிரில், தொடர்ந்து வெற்றிகளை குவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

- கோ. இராகவிஜயா
(மாணவப் பத்திரிக்கையாளர்)
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close