Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மின்னல் வேக அரைசதம்: மார்ட்டின் குப்திலின் சாதனையை 15 நிமிடத்தில் தகர்த்த கோலின் !

நியூசிலாந்து அணி வீரர் கோலின் மன்றோ 14 பந்துகளில் அரை சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதே போட்டியில் மார்ட்டின் குப்தில் நிகழ்த்திய சாதனையையும் கோலின் முறியடித்துள்ளார்.

இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஆக்லாந்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 142 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நியூசிலாந்தின் தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில், 19 பந்துகளில் அரைசதமடித்தார்.

அதாவது சர்வதேச டி20 வரலாற்றில் மிக விரைவாக அரைசதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை குப்தில் ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இதே போட்டியில் அடுத்த 15 வது  நிமிடத்தில் சர்வதேச டி20 வரலாற்றில் மின்னல் வேகத்தில் அரை சதம் அடித்த முதல் நியூசிலாந்து  வீரர் என்ற சானையை கோலின் மன்றோ ஏற்படுத்தினார்.

கோலின் மன்றோ 14 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதில் 7 சிக்சர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 357.14 இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் மின்னல் வேகத்தில் அரைசதமடித்த 2வது வீரர் என்ற பெருமையும் கோலினுக்கு கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இந்திய வீரர் யுவராஜ் இருக்கிறார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 12 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-0 என்று வென்றது.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ