Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சூதுகவ்வும்' : 0 ரன் டிக்ளேரும் ஜென்டில்மேன் கிரிக்கெட்டர் வீழ்ந்த கதையும்!

ஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7-ம் தேதி முடிந்தது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட,  இருநாள் போட்டிகள் அரையும் குறையுமாக நடந்தன. 


கூவி கூவி அழைத்தும் ரசிகர்கள் ஓட்டம்

முதலில் மேற்கிந்திய தீவுகள் அணி பேட் செய்தது.  இரண்டாம் நாள் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் 248/7ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு களத்தில் விளையாடியது மழை. ஒரு ஓவர் கூட வீசப்படாமல் இரு நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது.  எஞ்சியிருப்பது ஒரே ஒருநாள் மட்டும்தான். எப்படியும் ஆட்டம் சமன்தான் என்பது தெரியும்.

இதனால்  5வது நாள்  ஆட்டத்தை காண ஸ்டேடியம் பக்கம் யாரும் தலை வைத்து படுக்கவில்லை. டிக்கெட் ப்ரீனு கத்தி பாத்தாங்க கதறி பார்த்தாங்க. அப்பவும் கிரவுண்டு பக்கம் யாரோட தலையையும் காணல.  இதையடுத்து ஆஸி. கேப்டன் மேற்கு இந்திய தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டருடன் ஒரு டீல் பேசினார். அந்த டீல் ஜேசன் ஹோல்டருக்கு ஆப்பு வைத்து விடும் வகையில் இருந்தால், அவர் நைசாக பின் வாங்கி விட்டார்.

என்ன அந்த டீல்?

மேற்கு இந்திய தீவுகள் அணி( 248/7 ரன்களுக்கு) உடனடியாக தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர்  செய்ய வேண்டும். ஆஸி அணி 0/0 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்ஸை டிக்ளேர்  செய்யும். தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி  இரண்டாவது இன்னிங்சில் 121 ரன்களுக்கு டிக்ளேர் செய்து விட   வேண்டும்.  அப்போது ஆஸ்திரேலிய அணிக்கு அணிக்கு 370 ரன்கள் வெற்றி இலக்காக வரும். ஆஸ்திரேலிய அணி  இரண்டாவது இன்னிங்ஸில் 70 ஓவர்களில் 370 ரன்களை சேஸ் செய்ய வேண்டும். இதுதுதான் அந்த டீல்.

ஆனால்,  முதல் இரு  போட்டிகளில் தோல்வி அடைந்து,ஏற்கனவே அசிங்கப்பட்டுள்ள  மேற்கிந்திய தீவுகள் அணி, வாஷ் அவுட் ஆவதை விரும்பவில்லை. தவிர அந்த அணியின் வீரர்கள் பேட்டிங்கில் ஓரளவு தேறி வருவதால், ஹோல்டர் அந்த டீலை நிராகரித்து விட்டார். போட்டி டிராவில் முடிந்தது . ஒரு வேளை டீலை ஹோல்டர் ஓகே செய்திருந்தால்... டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 0/0 ரன்னுக்கு டிக்ளேர்சய்த இரண்டாவது போட்டியாக இது அமைந்திருக்கும். அப்போ முதல் போட்டி எது என்ற கேள்வி இங்கே எழுகிறதல்லவா? அது கிரிக்கெட் உலகமே ஜென்டில்மேன் என்று கருதிக் கொண்டிருந்த ஒருவரை சூது கவ்விய இடம்தான்.

சூது கவ்விய போட்டி

கடந்த 2000-ம் ஆண்டில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து இடையே டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி சென்சூரியனில் நடந்தது. இங்கேயும் மழை விடாமல் பெய்து கொண்டுதான் இருந்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 155/6 ரன்கள் எடுத்திருந்தது. ஒரு நாள் மட்டுமே மீதம் இருந்தது. தென் ஆப்ரிக்காவின்  அப்போதைய கேப்டன் ஹன்சே குரோனியே , இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசேனிடம் டீல் பேசினார்.

அதாவது 70 ஓவருக்கு 270 ரன் எடுக்க வேண்டும் என கூறினார் குரோனியே.  மழையால் பிச் எப்படி இருக்குமோ என்ற சந்தேகத்தில் முதலில் மறுத்துவிட்டார் நாசர் ஹுசேன். மீண்டும் தென் ஆப்ரிக்கா விளையாடத் தொடங்கியது. பிச்சில் அதிரடி மாற்றங்கள். தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்தவீச்சை பின்னி பிடலெடுத்து விட்டனர். 

 நாசர் ஹுசேனுக்கு தப்பு செஞ்சிட்டோமோனு ஒரு எண்ணம்.  பிட்சும் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது.  இப்போது மீண்டும் டீலுக்கும் இறங்கி வந்தார் இங்கிலாந்து கேப்டன்.  குரோனியிடம், டீல் பிடிச்சிருக்குனு சொல்ல, ரன் இலக்கை குறைக்க மீண்டும் இருவருக்கிடையே பேச்சுவார்த்தை நடந்தது.  இங்கிலாந்து கேப்டன் சொன்னதற்கெல்லாம்  குரோனியே தலையை ஆட்டினார்.  குரோனேயின் தலையாட்டலுக்கு பின்னால் அப்போது சூது இருந்தது யாருக்கும் தெரியாது.

ஒரு வழியாக, 76 ஓவர்களில் 249 ரன்கள் என்று இலக்கு நிர்ணையிக்கப்பட்டது. இங்கிலாந்து 0/0 டிக்ளேர்  செய்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி ரன் ஏதும் எடுக்காமல் டிக்ளேர் செய்வது முதல் முறை.

தகர்ந்த ஜென்டில்மேன் 'இமேஜ்'

இராண்டாவது இன்னிங்ஸை தென் ஆப்ரிக்கா விட்டுக் கொடுத்தது. இறுதியில், இரண்டு விக்கெட் மீதம் இருந்த நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. எதிரணிக்கு விட்டுக் கொடுத்து 'ரொம்ப நல்லவர்ன்னு' பேரு எடுத்தார் குரோனியே. ஆனால் உலகம் நம்பியது போல அவரு அவ்ளோ நல்லவர் இல்லை. அவருடைய சூட்சமம் ஆறு மாதத்துக்கு பின் வெளியானது.

இந்த போட்டியில் தான் சூதாட்டத்தில் ஈடுப்பட்டத்தை பின்னர் ஒப்புக் கொண்டார் குரோனியே . போட்டியை முடிவுக்கு கொண்டு வருவதாக,  புக்கிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு இத்தனையும் செய்திருக்கிறார் குரோனியே. தென் ஆப்ரிக்காவின் சக்சஸ்ஃபுல் கேப்டன் என்று புகழப்பட்ட குரோனியின் இமேஜ் ஓரே இரவில் இடிந்து  தரைமட்டமானது.

பின்னர் கிரிக்கெட் உலகம் குரோனியேவை புறக்கணித்து விட்டது. அவரும் அந்த ஆற்றாமையுடனே மரணம் அடைந்து  விட்டார். கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த கேப்டனை சூது கவ்விய 0 ரன் டிக்ளேர் ஆட்டம் அது. 

-ரெ.சு . வெங்கடேஷ்
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close