Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சொந்த ஊருக்கே ஓடிடுறோம்... கதறிய சிங்கங்கள் !

க்லாந்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் சிங்கத்தை கிவி கொத்தி குதறி எடுத்து விட்டது .  50 ஓவர் ஆட்டத்தையே டி20 போல ஆடிக் காட்டிய இலங்கை அணிக்குதான் இந்த நிலை. இந்த போட்டியில் பல சாதனைகள் அசாத்தியமாக நிகழ்த்தப்பட்டன. அவற்றை பார்ப்போம்.

                                                                                         நன்றி :ஸ்போர்ட்ஸ் கீடா

இந்தப் போட்டியில் மார்டின் குப்தில், கோலின் மன்றோ இருவருமே 20 பந்துகளுக்குள் அரைசதம் கண்டனர். இது ஒரு புதிய சாதனையாகும்.

ஒரே போட்டியில் மார்டின் குப்தில் 19 பந்துகளில் அரை சதம் அடித்து, மிக விரைவாக அரைசதமடித்த நியூசிலாந்து  வீரர் என்ற சாதனையை படைக்க, அதே போட்டியில் அவரது சாதனையை கோலின் 14 பந்துகளில் முறியடித்தது, கிரிக்கெட் உலகில் இதற்கு முன்பு எங்கும் நிகழ்ந்திராதது.  

இதற்கு முன், கடந்த 2009ஆம் ஆண்டு  இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான போட்டியில்  சங்கக்காரா 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதே போட்டியில் கவுதம் கம்பிர் 19 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். ஆனால் இருவரும் வேறு வேறு அணியை சேர்ந்தவர்கள். 

டி20 வரலாற்றில் 12 பந்துகளில் அரைசதமடித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் யுவராஜ்சிங். அடுத்த படியாக 17 பந்துகளில் அயர்லாந்தின் பால் ஸ்டர்லிங் மற்றும் மைபர்க், கிறிஸ் கெயில் உள்ளனர். 18 பந்துகளில் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல் அரை சதம் அடித்துள்ளனர்.

கோலின் மன்றோ தனது 50 ரன்களில் 46 ரன்களை ஓடாமலேயே பவுண்டரி, சிக்சர்களில் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் வெற்றியை எட்டியது. அந்த வகையில் இதுவும் ஒரு புதிய சாதனை ஆகும். இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு,  தென்ஆப்ரிக்க அணி பாகிஸ்தான் அணி எடுத்த 130 ரன்களை 11. 3 ஓவர்களில் துரத்தி வெற்றி கண்டதே சாதனையாக இருந்தது.


 

எடிட்டர் சாய்ஸ்