Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நிமிஷத்துல 'அவுட்' : ரெஸ்லிங் வீரரை ஒரே நிமிடத்தில் வீழ்த்திய வீராங்கனை!

த்தியபிரதேச மாநிலம் குவாலியரை  சேர்ந்தவர் ராணி ராணா. 21 வயதான இவர்,  ஒரு ரெஸ்லிங் வீராங்கனை. இந்தூர் அருகேயுள்ள கோதாரியா என்ற கிராமத்தில் மகா சங்கராந்தியையொட்டி, ரெஸ்லிங் போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டியில் ராணி ராணாவும் பங்கேற்றார். அதோடு அங்கு கூடியிருந்த ரெஸ்லிங் வீரர்களிடம்  என்னை தோற்கடிக்க முடியுமா? என்றும் சவால் விட்டார்.  45 கிலோ எடை பிரிவில்,வரை எதிர்த்து வினோத் பிரஜாபதி என்பவர் ராணியுடன் போட்டியிட ஒப்புக் கொண்டார்.

ஆனால் பிராஜாபதியால் ராணியிடம் ஒரு நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.   ராணி ராணாவை பார்த்து,  'நமக்கு எதுக்குப்பா வம்பு'னு அடுத்து எந்த ரெஸ்லிங் வீரரும் மோத முன்வரவில்லை. பிராஜாபதியை தோற்கடிப்பதற்கு முன் மகளிர் பிரிவில், சித்ரா யாதவ் என்ற வீராங்கனையையும் ராணி ராணா வீழ்த்தியிருந்தார் .

தனது வெற்றி குறித்து ராணி ராணா கூறுகையில், '' ரெஸ்லிங் மேடையில் இதற்கு முன்பும் ஆண்களை தோற்கடித்துள்ளேன். ஆண்களை எதிர்கொள்வது எனக்கு ஒன்றும் சவால் நிறைந்த விஷயமல்ல. என்னால் எத்தகைய ஆண்களையும் எதிர்கொள்ள முடியும்''  என்கிறார்.

தேசிய அளவிலான ரெஸ்லிங் வீராங்கனையான ராணி, இந்தூர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பயிற்சி பெற்று வருகிறார். ரெஸ்லிங்கில் இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்களை ராணி பெற்று தருவார் என்று அவரது பயிற்சியாளர் அஜய் வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close