Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல் ஒருநாள் போட்டி: ஸ்மித், பெய்லி அதிரடியில் வீழ்ந்தது இந்தியா!

பெர்த்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித் அபாரமாக விளையாடி 149 ரன்கள் விளாசினார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 36 ரன்னுக்கு தவான் விக்கெட்டை இழந்தது. இதைத் தொடர்ந்து களம் இறங்கிய கோலி, 91 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த கேப்டன் தோனி 18 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் நன்றாக விளையாடிய தொடக்க வீரர் ரோகித் சர்மா, 171 ரன்கள் விளாசினார். இது அவருக்கு 9வது சதம் ஆகும். ஜடேஜா 10 ரன் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் குவித்தது.
 

இதைத் தொடர்ந்து 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பிஞ்ச் 8 ரன்னிலும், வார்னர் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

பின்னர் களம் புகுந்த கேப்டன் ஸ்மித்- பெய்லி ஜோடி இந்திய பவுலர்களை துவம்சம் செய்தனர். தனது 3வது சதத்தை நிறைவு செய்த பெய்லி 112 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த மெக்ஸ்வெல் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். கேப்டன் ஸ்மித் அபாரமாக விளையாடி தனது 5வது சதத்தை நிறைவு செய்தார்.

கடைசி 5 பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்மித் 149 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் மார்ஷ் (12) வந்து வெற்றி இலக்கை அடைய வைத்தார். 49.2 ஓவரில் 310 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் சரண் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 9 ஓவர்கள் வீசி 68 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகித்துள்ளது. 2வது போட்டி வரும் 15ம் தேதி பிரின்பேனில் காலை 8.50 மணிக்கு நடைபெறுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ