Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பல்லான் டி ஆர்' தோல்வி : ரொனால்டோ சிலையில் மெஸ்சியின் பெயரை எழுதிய ரசிகர்கள்!

கால்பந்து உலகின் உயரிய விருதாக கருதப்படும் 'பல்லான் டி ஆர்' விருதினை  பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சி,  5வது முறையாக கைப்பற்றினார்.

இதையடுத்து போர்ச்சுகலில்
அமைக்கப்பட்டுள்ள
ரொனால்டோவின் சிலையில் மெஸ்சியின் பெயரையும்,  அவர் அணிந்து விளையாடும் 10-ம் எண் ஜெர்சி எண்ணையும் பதித்து ரசிகர்கள் அவமரியாதை செய்துள்ளனர்.

ஃபிபா அளிக்கும் இந்த விருதுக்கான இறுதி பட்டியலில்,  பார்சிலோனாவின் லயனல் மெஸ்சி (அர்ஜென்டினா), ரியல்மாட்ரிட்டின் ரொனால்டோ (போர்ச்சுகல் ) பார்சிலோனாவின் மற்றொரு வீரர் நெய்மர் ( பிரேசில் ) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பார்சிலோனா சூப்பர் ஸ்டார்,  லயனல் மெஸ்சி 41.33 சதவீத வாக்குகளை பெற்று 'பல்லான் டி ஆர்' விருதை (தங்கப்பந்து ) வென்றார். ரொனால்டோவுக்கு 27.76 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

 மெஸ்சியிடம் ரொனால்டோ தோல்வியடைந்ததை குறிக்கும் வகையில்,அவரது சொந்த ஊரான மெடிராவில் அமைக்கப்பட்டிருந்த ரொனால்டோவின்  சிலையில்,  மெஸ்சியின் பெயரையும் அவர் அணிந்து விளையாடும் ஜெர்சியின்  10-ம் எண்ணையும் சிவப்பு பெயிண்டால் எழுதி விட்டு  ஓடியுள்ளனர். போர்ச்சுகலை சேர்ந்த  பார்சிலோனா மற்றும் மெஸ்சியின் ரசிகர்களே  இதனை செய்திருப்பதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து ரொனால்டோவின் சகோதரி கேட்டியோ ஏவிரோ, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், '' அண்மையிவ் மெடிரா தீவு பகுதி  உலகின் அழகிய தீவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தீவை சுற்றி அமைந்துள்ள அழகிய கடல் மட்டுமல்ல, அடுத்தவர்களை மதிக்கும் கலாச்சரமும்தான். ஒரு போர்த்துக்கீசியராக இந்த சம்பவம் என்னை வெட்கப்பட வைக்கிறது.'' என தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு ரொனால்டோவின் கால்பந்து திறமையை பாராட்டி இந்த 10 அடி வெண்கலச் சிலை அவரது சொந்த ஊரான மெடிராவில் திறக்கப்பட்டது. போர்ச்சுகல் மற்றும் ரியல்மாட்ரிட் அணிகளுக்காக விளையாடும் ரொனால்டோ 7-ம் எண் ஜெர்சி அணிந்துதான் விளையாடுவார். பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக விளையாடும் மெஸ்சி 10-ம் எண் ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கமானது. 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ