Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

13 வருட உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது – கார்லி லாய்டு!

லக கால்பந்து அமைப்பான FIFA, ஒவ்வொரு வருடமும் உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர் வீராங்கனையை அறிவிக்கும். இந்த முறை இந்த நிகழ்ச்சி கோலாகலமாக,  சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்றது. இதில் 2௦15-ம் ஆண்டிற்கான மிகச்சிறந்த வீரராக மெஸ்ஸியும் மிகச்சிறந்த வீராங்கனையாக கார்லி லாய்டும் அறிவிக்கப்பட்டனர். மெஸ்ஸியை அனைவருக்குமே தெரியும்.

யார் இந்த கார்லி லாய்டு?

அமெரிக்க மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் இந்த 33 வயது வீராங்கனை. அணிக்காக கிட்டத்தட்ட 2௦௦ போட்டிகளில் பங்கேற்று, 70 கோல்களை அடித்துள்ளார் இவர். இதில் உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி, ஒலிம்பிக் போட்டி ஆகியவையும் அடங்கும். 2008, 2012 -ம்  ஆண்டுகளில் ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் 2௦15-ம் ஆண்டு உலகக் கோப்பையிலும் தங்கம் வென்றுள்ளார்.


கடந்த உலகக்கோப்பையில் கார்லி அடித்த ஹாட்ரிக் கோல் எவராலும் மறக்க முடியாதது. அமெரிக்க அணியின் வெற்றிக்கு முழு காரணமாய் இருந்தது அவரது கோல்கள். மகளிர் உலகக்கோப்பை வரலாற்றிலேயே,  இறுதிப்போட்டியில் மூன்று கோல்கள் அடித்த முதல் பெண்மணியும் இவர்தான். சர்வதேச கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில். இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் அடித்த இரண்டாவது நபரும் இவர்தான். இவரது சாதனையைப் பாராட்டும் வகையில். இவருக்கு கோல்டன் பால் விருதும், வெள்ளி பூட்ஸும் வழங்கப்பட்டன.


2007, 2011-ம் ஆண்டுகளிலும் அமெரிக்க அணி பதக்கங்களை வெல்ல,  தனது கோல்களின் மூலம் உதவியிருக்கிறார் இவர். கார்லியின் காலில் பட்ட பால் எல்லாம் கோல்தான்.

கார்லி தனது ஐந்து வயதிலேயே கால்பந்து மீது ஆர்வம் கொண்டு விளையாட துவங்கிவிட்டார் எனவும், ஆண்களுடன் சரி சமமாக ஆடி கோல்களை போடுவார் எனவும் அவரது தாயார் பமீலா பெருமையுடன் கூறுகிறார். பள்ளி அணிக்கு கேப்டனாக இருந்த கார்லி, ஒரு டோர்னமெண்ட்டில் தனி ஆளாக 26 கோல்கள் அடித்ததை மறக்க முடியாது என்று கூறுகிறார்.


21 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய கால் பந்து அணியில் தேர்வான கார்லி, பின்லாந்தில் நடக்கும் நார்டிக் கோப்பையை மூன்று வருடங்கள் தொடர்ந்து வென்றுள்ளார். அதன் மூலம் அமெரிக்க கால்பந்து அணிக்குள் 23 வயதில் பிரவேசித்தவர்,  கடந்த 10 வருடங்களாக வெற்றி வாகை சூடி வருகிறார். 'நேஷனல் அத்லெட் ஆப் தி இயர் 2008, FIFA கோல் ஆப் தி டோர்ணமன்ட் விருது 2015, சர்வதேச மகளிர் விளையாட்டு அமைப்பின் சிறந்த வீராங்கனை விருது 2015 என பல விருதுகளை தன் பாக்கெட்டில் வைத்திருக்கும் கார்லி, கடந்த ஆண்டிற்கான மிகச்சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை பெற்றுள்ளார்.

இவர் விருது பெற்றதை தொடர்ந்து, பீலே, மரடோனா போன்ற பல முன்னணி நட்சத்திர வீரர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


கார்லியின் ரியாக் ஷன் என்ன?


 தன் மேல் நம்பிக்கை வைத்ததற்காக தனது கோச், டீம் மேட்ஸ் மற்றும் ரசிகர்களுக்கு கார்லி நன்றி தெரிவித்துள்ளார். 13 வருட கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 
 
தா. நந்திதா
(மாணவப்பதிரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ