Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வெற்றி; 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த சானியா- ஹிங்கிஸ் ஜோடி!

ந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் மார்டினா ஹிங்கிஸ் இணை தொடர்ச்சியாக 29 வெற்றிகளை பெற்று,  22 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

உலகின் நம்பர் ஒன் ஜோடியான சானியா மற்றும் ஹிங்கிஸ் இணை,  கடந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல வெற்றிகளை பெற்று வருகிறது. கடந்த வாரம் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பட்டதை வென்ற இந்த இணை, தற்போது சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரில் கலக்கி வருகிறது. நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் சீன ஜோடியை எதிர்கொண்ட சானியா ஹிங்கிஸ் இணை,  6-2,6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இன்று நடைபெற்ற அரையிறுதியில் சானியா – ஹிங்கிஸ் இணை 4-6, 6-3, 10-8 என வெற்றி கொண்டு இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலமாக இந்த இணை,  தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வெற்றி பெற்று மகத்தான சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன் 1994-ம் ஆண்டு கிகி பெர்னாண்டஸ் – நடாஷா இணை, இரட்டையர் போட்டியில் தொடர்ச்சியாக 28 போட்டியில் வெற்றி பெற்று இருந்தனர். அதுவே இரட்டையர் பிரிவில் கடந்த 22 ஆண்டுகளில் சாதனையாக இருந்து வந்தது. தற்போது சானியா ஹிங்கிஸ் ஜோடி, இந்த நீண்ட கால சாதனையை முறியடித்து சரித்திரம் படைத்துள்ளது.

கடந்த வருடம் தொடக்கத்தில் இரட்டையர் பிரிவில் 5 -ம் இடத்தில் இருந்த சானியா,  ஹிங்கிஸ் உடன் ஜோடி சேர்ந்த பிறகு இந்த இணை நம்பர் ஒன் இடத்தை பிடித்து,  தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறது. கடந்த வருடம் அமரிக்க ஓபன் மற்றும் விம்பிள்டன் கிராண்ட்  ஸ்லாம் பட்டங்களை இந்த ஜோடி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

எஸ்.கே. பிரேம் குமார்
(மாணவ பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ