Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் சொதப்பிய இந்திய பந்துவீச்சு! இரண்டாவது போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தியது ஆஸி!

இந்தியா நிர்ணயித்த 309 ரன் என்ற இலக்கை 49 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. ஆஸ்திரேலிய அணியின்  பின்ச், மார்ஷ் , பெய்லி மூன்று பேரும் 70 ரன்களுக்கு மேல் குவித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.


தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய அணியின் பேட்டிங் கைகொடுத்த போதும், பந்துவீச்சு சுத்தமாக எடுபடவே இல்லை. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷாந்த், அஸ்வின் பெரிதாக ஜொலிக்கவில்லை. முக்கியமான கேட்ச்களை தவறவிட்டதும் தோல்விக்கு வழி வகுத்தது.

பிரிஸ்பன் ஆடுகளத்தில் ஒருநாள் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்த அணி என்ற பெருமையை ஆஸி அணி பெற்றுள்ளது.

முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துத்தார். இந்திய அணி தரப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புவனேஷ்வர் குமாருக்கு பதில் இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான  இரண்டாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் இந்திய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியாவில் இந்த தொடரின் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இதற்கு முன் வி.வி,எஸ் லட்சுமணன் மட்டுமே தொடர்ந்து இரண்டு சதங்களை அடித்த இந்தியராக இருந்தார். ரஹானே 89 ரன்களுக்கும், இந்திய துணை கேப்டன் விராட் கோலி 59 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.


ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு  ஆரம்பத்தில் அனுபமில்லாமல் காணப்பட்டாலும் இறுதி கட்ட ஓவர்களில் இந்திய அணிக்கு நெருக்கடியாக அமைந்தது. ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை குவித்தது.
சென்ற போட்டியை போலவே இந்தியா சிறப்பாக ஆடி 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இதனை பந்துவீச்சாளர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டால் இந்தியா வெற்றி பெறும். இஷஆந்த் ஷர்மா இன்றைய போட்டியில் பந்துவீச்சை பலப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

முதலில் களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். தவான் 6 ரன்களில் பாரீஸிடம் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின் ஆடவந்த துணை கேப்டன் கோலி நிதானமாக விளையாடி 59 ரன்கள் சேர்த்தார். அவர் ரன் அவுட் முறையில் தனது விக்கெட்டை இழந்தார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ரோஹித் சர்மா இந்த போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ