Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோலி அவுட்டானால் பதான் இறங்குவார்: பிரிஸ்பன் ஸ்கோர்போர்டு காட்டிய குறியீடு

ஆஸ்திரேலியாவில் கோலி அவுட் ஆனவுடன் இந்தியாவில் உள்ள பதான் களமிறங்க வேண்டும் என்றால் அது சாத்தியமா? ஆனால் நேற்று ஒரு நிமிடம் இதனை சாத்தியப்படுத்தியது பிரிஸ்பன் ஸ்கோர்போர்டு. கிரிக்கெட் போட்டி நடக்கும் ஆடுகளங்களில் ஸ்கோர்போர்ட்கள் மிக முக்கியமானவை. போட்டியை நேரில் பார்ப்பவர்களுக்கு ஸ்கோர்போர்டுகள் தான் யார் எவ்வளவு ரன் குவித்தார் என்பதை காட்டும், அணியின் ஸ்கோர் என்ன? இன்னும் எத்தனை ரன் குவிக்க வேண்டும் என்பதை காட்டும்.

அப்படிபட்ட ஸ்கோர் போட்டில் நேற்றைய ஆஸ்திரேலிய - இந்தியா போட்டியில் பிரிஸ்பன் ஆடுகளத்தில் உள்ள ஸ்கோர்போர்டு டிஸ்ப்ளேயில் ஏற்பட்ட குளறுபடி தான் இந்திய ஸ்கோர்கார்டில் பதான், படேல் பெயரையும், ஆஸி ஸ்கோர்கார்டில் மைக்கேல் க்ளார்க் பெயரையும் சேர்த்தது.

இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஓய்வுபெற்ற மைக்கேல் க்ளார்க் அணியில் இடம்பெற்று விட்டார். அணியில் இடம்பிடித்த க்ளார்க்கை வரவேற்கிறோம் என ஆஸி ரசிகர்களும், இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இல்லாததால் பதான் வருகை இந்திய அணிக்கு உதவும் என சொல்லாமல் சொல்லி இருக்கிறது பிரிஸ்பன் ஸ்கோர்போர்டு என இந்திய ரசிகர்களும் ட்விட் செய்தனர்.

இதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் க்ளார்க் கிண்டலாக ட்விட் செய்ய ஸ்கோர்போர்டு போட்டோ தெறி வைரலானது. இது சென்ற ஆண்டு ஆடிய ஆட்டத்தின் அதே ஸ்கோர்கார்டுகள் பயன்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட தவறு என்று கூறப்படுகிறது. ஸ்கோர்கார்டுகளில் இதேபோன்று தவறு நடப்பது வழக்கம் தான். ஒரு முறை சச்சின் சதமடித்த போது 99 ரன்களில் இருந்து 100 என்று மாறுவதற்கு பதில் 00 என்று மாறியதும் ஸ்கோர்கார்டு தவறுகளில் ஒன்று. பின்பு ஸ்கோர்கார்டுகள் மாற்றப்படுவது சாதாரண விஷயமாக அமைந்துவிடும். ஆனால் இந்த முறை சமூக வலைதளங்கள் வைரலாக்கிவிட்டன என்று கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ