Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3வது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி ;தொடரை இழந்தது இந்தியா!

ந்திய அணியை தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகளில் தோற்கடித்து ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

ந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 3வது ஒருநாள் போட்டி, மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் இந்தியாவை பேட் செய்யக் கேட்டுக் கொண்டது.

தொடக்க வீரர் ரோகித் 6 ரன்களில் அவுட் ஆனார். ஷிகர்தவான் 68 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விராட் கோலியும் ரஹானேவும் நிலைத்து விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரஹானே 50 ரன்களில் அவுட் ஆனார். விராட் கோலி 117 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும் 2 சிச்சர்களும் அடங்கும். கோலியின் 24வது ஒருநாள் சதம் இதுவாகும்.

அத்துடன் இந்த போட்டியில் 7 ஆயிரம் ரன்களை மிக விரைவாக கடந்த கிரிக்கெட் வீரர் என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தினார். இதற்கு விராட் கோலிக்கு 161 இன்னிங்ஸ்களே தேவைப்பட்டது. இதற்கு முன் தென்ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் 166 இன்னிங்ஸ்களில் 7 ஆயிரம் ரன்களை அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை விராட் கோலி முறியடித்துள்ளார்.

இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்களை எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மார்ஷ் 62 ரன்களும் மேக்ஸ்வெல் 96 ரன்களும் அதிகபட்சமாக அடித்தனர். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இன்னும் இரு போட்டிகள் எஞ்சியுள்ளன.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ