Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச ரெஸ்லிங் வீரரை கதாயுதத்துடன் எதிர்கொண்ட இந்திய வீரர் !

ரெஸ்லிங் எனப்படும் பொழுதுபோக்கு மல்யுத்தப் போட்டிகள் இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில் வெகு பிரபலம். ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் மல்யுத்தப் போட்டி  இந்தியாவில்  சுமார் 13 ஆண்டுகளுக்குப்  பிறகு டெல்லியில் கடந்த இரு நாட்கள் அரங்கேறின.

ஜான் சீனா இல்லை


ரோமன் ரெயின்ஸ், பிக் ஷோ, கேன் போன்ற நட்சத்திர வீரர்களோடு இரண்டு இந்திய வீரர்களும் இப்போட்டியில் பங்கேற்று இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தனர். இந்தியாவில் இந்த போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதும் உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த ஜான் சீனா  பங்கேற்பார் என்று கூறப்பட்டது. தனது தனித்துவமான ஆட்டத்தால் ஆண்களை மட்டுமல்லாது, தனது உடல்வாகுவால் பெண்களையும் கவர்ந்தவர்தான் இந்த ஜான் சீனா. ஆனால் கடைசி கட்டத்தில் ஏற்பட்ட காயத்தால் அவர் விலகிக்கொள்ள, அவருக்குப் பதில் ‘உலக ஹெவிவெயிட் சாம்பியன்’ ரோமன் ரெயின்ஸ் பங்கேற்றார். நடப்பு சாம்பியன் பங்கேற்றிருந்த போதும், தங்களது ஆதர்சன நாயகன் வராததால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கதாயுதத்தோடு வந்த சதேந்தர்

நேற்று நடந்த ஒரு போட்டியில் இந்திய வீரர் சதேந்தர், ‘ஜீத் ராமா’ என்ற பெயரில் இந்த  தொடரில் அறிமுகமானார். அரங்கில் நுழையும்போது அவர் கதாயுதத்தை கையில் எடுத்துவர மொத்த அரங்கமும் அதிர்ந்தது. ஒரு தலைசிறந்த வீரருக்கு எந்த வகையான வரவேற்பு கிடைக்குமே வரவேற்பை இந்திய ரசிகர்கள் சதேந்தருக்கு அளித்தனர். சாட் காபிள் என்ற வீரருக்கு எதிராக தனது முதல் போட்டியில் மோதிய சதேந்தர் எளிதில் வெற்றி பெற்று தனது சர்வதேச ரெஸ்லிங் பயணத்தை இனிப்புடன் தொடங்கினார்.

 

சதேந்தர் தேசிய அளவிலான குஸ்தி போட்டிகளில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இந்தியரான லவ்பிரீத் சிங்கும் தனது முதல் போட்டியில் வெற்றிவாகை சூடினார். ‘ரஃப்தார் கிஷன் என்ற பெயரில் களமிறங்கிய அவர் ஜேசன் ஜோர்டானை பந்தாடினார். அடிப்படையில் கபடி வீரரான லவ்பிரீத் ஆடிய விதம் அனைவரையும் ஆச்சரிப்படுத்தியது. மிகவும் நேர்த்தியாக விளையாடிய அவர், பல சாதனைகள் படைப்பார் .


கிரிக்கெட்டில் கவர் டிரைவ், ஸ்கொயர் கட் என்று விதவிதமான ஷாட்கள் இருப்பது போல், இதிலும் ஒவ்வொரு வீரர்களுக்கும் பிரசித்தி பெற்ற ஒரு ஷாட் உண்டு. கெயினுக்கு ‘ சோக் ஸ்லாம்’, ரான்டி ஆர்டனுக்கு ‘ஆர்கேஓ’ என ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு. அவ்வகையில் லவ்பிரீத் ‘ஜெய்
ஹிந்த்’ என்ற தனது பிரத்யேக ஷாட்டால் எதிராளியை சாய்த்தார்.

கேன், ரோமன் ரெயின்ஸ் வெற்றி

பிற போட்டிகளில்  கேன், ரோமன் ரெயின்ஸ், டால்ஃப் சிக்லர் ஆகியோர் வெற்றி பெற்றனர். மாமிச மலையான பிக் ஷோவுடன் நடந்த போட்டியில் ‘ஹெவி வெயிட் சாம்பியன்’ ரோமன் ரெயின்ஸ் வெற்றி பெற்றார். முரட்டுக் குணம் கொண்ட ‘டெமான்’ கேன் பிரே வாட்சை வீழ்த்தினார்.

பெண்கள் சாம்பியன் சார்லட், சம்மர் ரேவை வீழ்த்தி பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பிரபல வீரர் ரைபேக் தோல்வியடைந்தார். கட்டாயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரைபேக்கை ருசேவ் வீழ்த்தி ஆச்சரியமளித்தார்.

கிரிக்கெட், ஷாப்பிங், தாஜ் மகால்‘

டெல்லி வந்த சர்வதேச ரெஸ்லிங்  வீரர்கள் தங்கள் நேரத்தை ஷாப்பிங் செய்தும், சுற்றுலாத் தலங்களை சென்றும் கழித்தனர். கிரிக்கெட் வீரர் ஷேவாக், கேனை சந்தித்துப் பேசினார். மேலும் சில வீரர்கள் ஷேவாக்கோடு இணைந்து கிரிக்கெட் விளையாடினர். பெண்கள் சாம்பியன் சார்லட் இந்தியா வந்ததை
நினைவு கொள்ளும் பொருட்டு சேலைகளையும், நகைகளையும் வாங்கினார். மேலும் சில வீரர்கள் தாஜ் மஹால், ஹுமாயுன் சமாதி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் கண்டு களித்தனர்.

இந்திய ரசிகர்கள் பலரும் சர்வதேச வீரர்களின் டெல்லி  வருகையால் மகிழ்ச்சியடைந்தனர். தங்களுக்குப் பிடித்த மல்யுத்த வீரர்களோடு இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். கிரேட் காளிக்குப் பிறகு சர்வதேச ரெஸ்லிங்கில் இரு இந்திய வீரர்கள் வெற்றி பெற்றிருப்பது இந்திய ரசிகர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மு.பிரதீப் கிருஷ்ணா

(மாணவ செய்தியாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ