Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம்: ஒரு வருடத்திற்கு யாரும் அசைக்க முடியாது!

ங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த தென்னாப்பிரிக்க அணி, நம்பர் 1 இடத்தையும் இழந்தது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. தோனி தலைமையிலான இந்திய அணி முதலிடத்தில் 2011ம் ஆண்டு இருந்தது. அதன் பின் அந்த இடத்தை தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி பிடித்துள்ளது.

தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட மிக குறைந்த டெசிமல் புள்ளிகள் வித்தியாசத்தில் வேறுபட்டுள்ளது. ஆனாலும் இந்திய அணியால் ஒரு வருடத்துக்கு இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் எப்படி தெரியுமா?
 


ஆஸ்திரேலிய அணிக்கு தற்போது உள்ள அட்டவணைப்படி அக்டோபர் மாதம் வரை 2 டெஸ்ட் போட்டிகள் தான் உள்ளது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்து அணியை சொந்த மண்ணிலும் எதிர் கொள்ள உள்ளது இந்த இரண்டு தொடர்களிலுமே இந்திய அணிக்கு தான் அதிக வெற்றி வாய்ப்பு. குறிப்பாக இங்கிலாந்து அணி இந்தியாவில் இந்தியாவை வீழ்த்துவது மிக கடினம். உலகின் நம்பர் 1 அணியாக இருக்கும் இந்திய அணி அடுத்த ஆண்டு இறுதி வரை நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக்கொள்ள பிரகாசமான வாய்ப்புள்ளது.


இந்திய அணி முதலிடத்தில் நீடிக்க இந்த 3 முக்கிய காரணங்களும் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.

பெஸ்ட் டாப் 5 :

உலகின் டாப் பேட்ஸ்மேன்களால் இந்தியாவின் டாப் ஆர்டர் உருவாக்கப்பட்டுள்ளது. தவான், விஜய் உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மூன்றாவது இடத்தில் புஜாரா, ராகுல் இருவரும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சதமடித்து மூன்றாவது இடத்தில் யாரை களமிறக்குவது என்ற குழப்பத்தை தேர்வுக்குழுவுக்கு ஏற்படுத்தி வருகின்றனர். கேப்டன் கோலி, ரஹானே 4வது மற்றும் 5வது இடத்தில் இந்திய அணியை பலப்படுத்துகின்றனர்.  கோலி தலைமையிலான இந்திய அணி சென்ற வருடம் ஒரு தொடரைக்கூட இழக்கவில்லை காரணம் இந்த டாப் ஆர்டர் வீரர்கள் ரன் குவித்ததே.

அஸ்வின், ஜடேஜா, மிஸ்ரா:

அடுத்த வருடம் பெரும்பாலான ஆட்டங்களை இந்தியாவில் ஆடவுள்ளது. இந்திய அணி.  இந்திய மண்ணில் அஸ்வின், ஜடேஜா, மிஸ்ரா ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொண்டு இந்தியாவில் மற்ற அணிகள் ரன் குவிப்பது எவ்வளவு கடினம் என்பதை நம்பர் 1 இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா உலகிற்கு நன்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும். இவர்கள் தான் தற்போது உலகின் டாப் ஸ்பின்னர்கள் இடத்தை ஆக்கிரமிக்கிரார்கள். இவர்கள் பலம் இந்தியாவை நம்பர் 1 இடத்தில் அதிக நாட்கள் நீடிக்க வைக்க உதவும் ஆயுதமாக இருக்கும்.


கேப்டன் அக்ரஸிவ்:

கோலி தலைமையிலான இந்திய அணியின் மனநிலை டெஸ்ட் போட்டிகளில் சுத்தமாக மாறிவிட்டது என்று தான் கூறவேண்டும். கேப்டன் கோலி ' அனைத்து போட்டிகளையும் முடிவுக்கு கொண்டு செல்லவே விரும்புகிறேன். தோல்விகளை எங்களுக்கு பிடிக்கவில்லை. ட்ரா செய்ய போராட மாட்டோம். வெற்றியை நோக்கியே நகர வேண்டும்' என தனது அக்ரஸிவ் கேப்டன்ஸியை வெளிப்படுத்துகிறார்.
வீரர்களை பேட்ஸ்மேனை சுற்றி நிற்க வைத்து ஃபீல்டிங் செட் செய்வது. வேகப்பந்துவீச்சாளர்களை சிறப்பாக கையாளுவது, ஆஸ்திரேலிய அணியின் அக்ரஸிவ் பார்முலாவான 9:2 ஃபீல்டிங் முறையை பயன்படுத்துவது என கோலியின் கேப்டன்ஸி மற்ற அணிகளை மிரள வைக்கிறது. இதுவும் இந்திய அணிக்கு பலமாக அமையும்.
 


முதலிடம் பிடித்துவிட்ட இந்திய அணி மேலும் ஒரு வருடத்துக்கு அசைக்க முடியாத அணியாக சர்வதேச அரங்கில் வலம் வர இந்தியா சொந்த மண்னில் கில்லியாகவே தொடர வேண்டும். கோலி அண்ட் கோவின் வெற்றி வெளிநாட்டு மைதானங்களிலும் தொடர்ந்தார் இந்திய அணி இன்னும் 18-20 மாதங்களுக்கு நம்பர் 1 அணியாக திகழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ