Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கெயில் ருத்ர தாண்டவம்! 12 பந்தில் அரை சதமடித்து யுவராஜ் சாதனையை சமன் செய்தார்

கெயில்- இந்த வார்த்தையை கேட்டாலே பந்துகள் தானாக சிக்ஸர்களாக பறக்கும். அப்படிப்பட்ட அதிரடி வீரர் கெயில், ஆட்டத்தை ஒரே ஓவரில் மாற்றக்கூடிய சிறப்பு வாய்ந்தவர்.

ஐ.பி.எல், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்காக தெறியாக ஆடி பெயர் பெற்ற கெயில்,  தற்போது சம்பள பிரச்னை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் புறக்கணிக்கப்பட்டு,  பிக் பேஷ் போட்டிகளில் ஆடி வருகிறார். இதில் அடிலெய்டு அணிக்கு எதிரான ஆட்டத்தில்,  கெயில் ஆடிய ருத்ர தாண்டவம் மூலம் டி 20 போட்டியில், யுவராஜின் 12 பந்துகளில் அரை சதமடித்த சாதனையை சமன் செய்துள்ளார்.


2,0,6,6,6,6,2,6,6 (free hit),4,1,6  என வரிசையாக விளாசி தள்ளி,  தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம்,  டி 20 போட்டிகளில் குறைந்த பந்தில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை யுவராஜூடன் பகிர்ந்து கொண்டார். யுவராஜ் 2007-ம் ஆண்டு நடைபெற்ற  இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை டி 20 போட்டியில், 6 பந்தில் 6 சிக்ஸர் அடித்து இந்த சாதனையை நிகழ்த்தினார்.

கெயில் இப்படி ருத்ர தாண்டவம் ஆடியும் பாவம்... மெல்போர்ன் அணி வெற்றி பெறவில்லை. அதோடு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தது.
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ