Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் சொதப்பிய பந்துவீச்சாளர்கள்! இந்திய அணிக்கு 349 ரன்கள் இலக்கு

கான்பெராவில் நடக்கும் 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த தொடரில் முதல் முறையாக முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்கிறது. இந்திய தரப்பில் பரிந்தார் சரண் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸி தரப்பில் மிட்சல் மார்ஷ், போலந்து நீக்கப்பட்டு வார்னர் மற்றும் லயன் சேர்க்கப்பட்டுள்ளனர்.



முதலில் பேட் செய்ய துவங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினர். அணியின் துவக்க வீரர்கள் வார்னர் மற்றும் பின்ச் முதல் விக்கெட்டுக்கு 187 ரன் குவித்து ஆட்டத்தை அதிரடியாக துவக்கினர். பின்ச் அபாரமாக ஆடி சதமடித்தார். வார்னர் 93 ரன்களும், ஸ்மித் 51 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இறுதி ஓவர் வரை இந்திய வீரர்களின் பந்து வீச்சை அடித்து நொறுக்கிய ஆஸி வீரர்கள்,  50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, 348 ரன்களை குவித்தனர். கடைசி கட்டத்தில் இஷாந்த், உமேஷ் இருவரும் தலா 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணிக்கு 349 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸி. வலுவான பேட்டிங் வரிசை கொண்டுள்ள இந்திய அணியில் முக்கிய வீரர்கள் பிரகாசித்தால் இந்த இலக்கை இந்தியா எட்டும். 

முன்னதாக ஆஸி அணியின் வீரர் மேக்ஸ்வெல்,  இந்திய வீரர்கள் சுயநலத்தோடு ஆடுகிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளதற்கு அணி மேலாளர் ரவி சாஸ்திரி,  "வீரர்கள் சுயநலத்துடன் ஆடவில்லை. அப்படியென்றால் கோலி 7000 ரன்களை கடக்க இன்னும் 100 போட்டி ஆகி இருக்கும், ரோஹித் ஷர்மா இரண்டு முறை 200 ரன்களை கடந்திருக்கமாட்டார்"  என பதிலளித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ