Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை மக்களை மனம் திறந்து பாராட்டிய சச்சின்!

ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை முதல் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை வரை, எம்.ஆர். எப். நிறுவனம் ஸ்பான்ஷராக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க, சச்சின் சென்னை வந்திருந்தார்.


 நிகழ்ச்சியில் பேசிய சச்சின், "சென்னையில் பெய்த கனமழைக்கு பிறகு இப்பொழுதுதான் முதன்முறையாக சென்னை வந்துள்ளேன். நான் முன்பு எப்படி பார்த்தேனோ அப்படியேதான் இருக்கிறது. எந்த ஒரு மாற்றமும் எனக்கு தெரியவில்லை. பெரு வெள்ளத்தை சென்னை மக்கள் எதிர்கொண்ட விதமும் என்னை வியக்க வைத்தது. 

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டபொழுது மக்களுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் எல்லா பகுதியிலும் இருந்தும் சென்னைக்கு உதவிகள் குவிந்தன. இந்தியாவின் ஒருமைப்பாட்டை சென்னை மழையின் போது காண முடிந்தது" என்று கூறினார்.

பின்னர் பேசிய ஐ.சி.சி. செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன்,  "சச்சின் இன்னமும் உடற்தகுதியுடன்தான் இருக்கிறார். இன்னும் அவர்  கிரிக்கெட் விளையாடலாம்" என்று கூறினார்'

இதற்கு சச்சின்,  "உங்களுக்கு தெரிகிறது. ஆனால் நிறையபேருக்கு தெரியவில்லையே" என்று நையாண்டியாக பதில் அளித்தார்.

- சார்லஸ்

படங்கள்:மீ.நிவேதன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ