Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய வீரர்கள் சுயநலம் மிக்கவர்கள்: மாக்ஸ்வெல் சர்ச்சை கருத்து!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான க்லென் மாக்ஸ்வெல் ஒரு செய்தியாளர் சந்திப்பில், "இந்திய வீரர்கள் சிலர், தங்கள் சொந்த சாதனைகளுக்காகவே விளையாடுகின்றனர். சாதனை செய்ய வேண்டும் எனும் ஊந்துதலில் சிலரும், அந்த எண்ணம் இல்லாமல் சிலரும் விளயாடுகின்றனர்" என கூறியுள்ளார். சற்றே சலசலப்பை ஏற்படுத்தியுள்ள இவரது கருத்தை சக வீரர்களே ஆதரிக்க மறுத்து விட்டனர்.

சக வீரரான ஃபிஞ்ச் இதைப் பற்றி கூறுகையில் "இது அவரது (மாக்ஸ்வெல்) தனிப்பட்ட கருத்து என தெளிவாக தெரிகிறது, மொத்த ஆஸ்திரேலிய அணியின் கருத்தையும் இது பிரதிபலிக்கவில்லை. இந்திய வீரர் விராட் கோலி 80 பந்துகளில் சதம் அடித்து, அவரது அணிக்கு வலு சேர்த்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 25 சதம் அடித்து மிகப்பெறிய சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார். இதில் எதுவும் சுயநலம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அது ஒரு அசாதரனமான ஆட்டம்.

ஷிகார் தவான் தன் பங்கிற்கு 95 பந்துகளில் சதத்தை எட்டினார். ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து அவர் இந்திய அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுக்கிறார். அந்த அணியில் தங்கள் பணியை சிறப்பாக செய்ய பல சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்" என கூறியுள்ளார்.

மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவென் ஸ்மித் "ஒரு மிகப்பெரும் சாதனையை நிகழ்த்துவது அருகில் இருந்தால், எவராக இருந்தாலும் சற்றே நிதானத்துடநும், பொருமையுடனும் முன்னேறுவது இயற்க்கையே. ரோஹித்தும் கோலியும் தலைசிறந்த வீரர்கள். அவர்களின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருக்கிறது, 'சுயநலம்' எனும் எந்த ஒரு பிரச்னையும் அங்கே இருப்பதாக தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

பா.அபிரக்ஷன்
(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close