Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நான் நிரபராதி என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு அளியுங்கள்: டானிஷ் கனேரியா வேண்டுகோள்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அனில் தல்பாட்டுக்குப் பிறகு இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற பெருமை பெற்றவர் டானிஷ் கனேரியா. கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில், ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கிய இவருக்கு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு வாழ்நாள் தடை விதித்தது.

இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முழுமையாக ஏற்றுக் கொண்டது. இதனை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் கனேரியா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இந்த விவகாரத்தில் தனக்கு உதவி செய்யும்படி டானிஷ், பி.சி.சி.ஐ.யிடம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் இந்து மைனாரிட்டி இனமாக உள்ளதால் பி.சி.சி.ஐ. தலைவர் ஷசாங்க் மனோகரிடம் பேசி, இந்த விவகாரத்தை ஐ.சி.சி. போர்டில் எழுப்பி தனக்கு உதவி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால், இதனை கனேரியா திட்டவட்டமாக மறுத்துள்ளார். 'எனக்கு பி.சி.சி.ஐ.யிடம் உதவி கேட்கும் திட்டம் இல்லை' எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதனால் வேதனை அடைந்துள்ளேன். ஆனால், பாகிஸ்தானி எனக் கூறுவதில் பெருமை அடைகிறேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரும்படி பி.சி.பி.யிடம் அப்பீல் செய்யப் போகிறேன். நான் நிரபராதி என்பதை நிரூபிக்க ஒரு இறுதி வாய்ப்பை அளிக்க வேண்டும்'' என்றார்.

கடந்த 2010-ல் இருந்து கனேரியா மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2012-ல் 4 மாதங்கள் இவர் கடுங்காவல் தண்டனையில் இருந்து இருக்கிறார்.

ந.ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close