Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடைசி போட்டியில் இந்தியா வெற்றி...மணீஷ் பாண்டே அபார சதம் !

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் இந்தியா 330 ரன்களை துரத்தி,  அபார வெற்றி பெற்றது. 330 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணியின் முன்னணி வீரர்கள், அபாரமாக ரன் குவித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். ரோஹித் ஷர்மா 99 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மணீஷ் பாண்டே 104 ரன்கள் குவித்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
 
ஆஸ்திரேலியாவில், ஆஸி அணிக்கு எதிரான மிகப்பெரிய ரன் சேஸ் இது. 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ள இந்தியா, வரும் 26-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட டி 20 போட்டியில் பங்கேற்கவுள்ளது. ஆட்ட நாயகனாக மணீஷ் பாண்டேவும், தொடர் நாயகனான ரோஹித் ஷர்மாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

 

இன்று காலை தொடங்கிய ஆட்டத்தில், இந்திய அணி தரப்பில் ரஹானே, புவனேஷ் குமார் நீக்கப்பட்டு பூமராஹ், மணீஷ் பாண்டே சேர்க்கப்பட்டனர். ஆஸி அணியில் மேக்ஸ்வெல், ரிச்சர்ட்ஸன் நீக்கப்பட்டு மார்ஷ், போலந்து சேர்க்கப்பட்டனர். முதல் ஓவரிலேயே இஷாந்த் ஷர்மா பின்ச் விக்கெட்டை வீழ்த்தினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close