Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யூரோ 2016 : கோல் லைன் டெக்னாலஜி அறிமுகம்; யூஃபா அறிவிப்பு (வீடியோ)

யூரோ 2016 கால்பந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் 'கோல் லைன் டெக்னாலஜி' நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யூஃ பா அறிவித்துள்ளது.
                           

கடந்த 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போது ஜெர்மனிக்கு எதிரான 2வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பிராங்க் லேம்பர்ட் அடித்த பந்து கிராஸ் பாரில் பட்டு எல்லைக் கோட்டைத் தாண்டியது. ஆனால் நடுவரால் சரியாக அதனை கணித்து கோல் என்று அறிவிக்க முடியவில்லை.

கடந்த 2012ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை போட்டியின் போது இங்கிலாந்து  அணிக்கு எதிராக உக்ரேன் வீரர் ஷிவ்சென்கோ அடித்த கோலும் இதே போல்  மறுக்கப்பட்டது. அது முதல் கால்பந்து போட்டிகளின் போது,  கோல்லைன் டெக்னாலஜி அறிமுகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலு பெற்று வந்தது.

தொடர்ந்து  கடந்த பிரேசில்  உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது கோல் லைன் டெக்னாலஜி முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வரும் ஜுன் மாதத்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து  தொடரிலும் 'கோல் லைன் டெக்னாலஜி' நடைமுறைக்கு கொண்டு வருவதாக யூஃபா அறிவித்துள்ளது.

அதன்படி , யூரோ 2016 கால்பந்து தொடரில் ஜெர்மன் தொழில்நுட்பமான ' கோல் கண்ட்ரோல் சிஸ்டம் 'கடைபிடிக்கப்படும். வரும் 2016-17 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரில் பிரிட்டனின் 'ஹாக் ஐ ' தொழில்நுட்பம் பின்பற்றப்படும் என்று  யூஃபா அறிவித்துள்ளது. தற்போது சாம்பியன்ஸ் லீக்கில் கோல் லைன் அருகே இரு நடுவர்கள் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர். ஹாக் ஐ தொழில் நுட்பம் அமலுக்கு வருவதால், மீண்டும் 3 நடுவர்களே களத்தில் இருப்பார்கள்.

கோல் லைன் டெக்னாலஜி என்பது பந்துக்குள்  மின்னணு சிப் பொறுத்தப்பட்டிருக்கும். பந்து எல்லைக் கோட்டைத் தாண்டினால் மெயின் ரெஃப்ரி கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தில் கோல் என்று காட்டிவிடும். அதற்கேற்ற வகையில் போட்டி நடைபெறும் மைதானங்களில் இரு கோல் பகுதியையும் பல முனைகளில் இருந்து கண்காணிக்க 14 நவீன கேமராக்கள் பொறுத்தப்பட்டிருக்கும். பிரிட்டினின் ஹாக் ஐ தொழில் நுட்பம் ஏற்கனவே கிரிக்கெட், டென்னிஸ்  விளையாட்டுகளில் நடைமுறையில் உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close