Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லாராவின் சாதனையை எட்ட 86 ரன்களே தேவை : சங்கடத்துடன் விடைபெற்றார் சந்தர்பால் !

மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஷிவ்நாராயண் சந்தர்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். சுமார் 22 வருடங்கள் கிரிக்கெட்டுடன் பயணித்த அவருக்கும்  பெரும்பாலான  கிரிக்கெட்டர்களை போல, ஓய்வு பெறும் தருணம் இனிப்பாக இல்லை.

கடந்த 1994-ம் ஆண்டு சந்தர்பால்,  கினியாவில் நடந்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன் முறையாக களம் இறங்கினார். இந்த போட்டியில் சந்தர்பால் அரை சதம் அடித்தார். மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில்,  44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அவரது இறுதி டெஸ்ட் போட்டியும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே அமைந்தது. பர்படாசில் நடந்த இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் சந்தர்பால் அடித்தது வெறும் 92 ரன்கள் மட்டுமே. இதையடுத்து கடந்த ஜுன் மாதம்,  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் நீக்கப்பட்டார். அதற்கு பிறகு வாய்ப்பளிக்கப்படவில்லை

இதுவரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சந்தர்பால், அதிகபட்சமாக 203 ரன்களை அடித்துள்ளார். தென்ஆப்ரிக்க, வங்கதேச அணிகளுக்கு எதிராக இரட்டை சதம் கண்டுள்ளார்.

சந்தர்பால் அடித்துள்ள டெஸ்ட் ரன்களின் எண்ணிக்கை 11,867. இதில் 30 சதங்களும் 66 அரை சதங்களும் அடங்கும். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் லாரா முதலிடத்தில் உள்ளார்.  லாரா அடித்தது 11,953 ரன்கள்.  லாராவின் ரன்களை எட்ட சந்தர்பாலுக்கு வெறும் 86 ரன்களை தேவைப்பட்டது. இன்னும் 2  ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பளித்திருந்தால், லாராவின் சாதனையை சந்தர்பால் முடியடித்திருப்பார். ஆனால் கடைசி வரை அந்த வாய்ப்பு சந்தர்பாலுக்கு கிடைக்கவில்லை.

கடைசியாக அவர் விளையாடிய 10 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு முறைதான் அரை சதம் அடித்தார்.

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை 268 போட்டிகளில் விளையாடி 8,778 ரன்களை குவித்துள்ளார். இதில் 11 சதங்கள் அடங்கும். கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 150 ரன்கள் அடித்தது அதிகபட்சம்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 22 டி20 போட்டிகளில் சந்தர்பால் விளையாடியுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டுக்கு பிறகு டி20 போட்டியில் அவர் இடம்பெறவில்லை.

கடந்த 2008ஆம் ஆண்டு சந்தர்பால் 'விஸ்டன்' சிறந்த வீரருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ