Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்மாடியோவ்... 50 ஓவரில் 485 ரன்கள்! - இளம் இந்திய அணி அசத்தல் ஆட்டம்!

ஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிகளை தடுத்து நிறுத்தி, அதன் மண்ணிலேயே அந்த அணியை  329 ரன்களை  சேஸ் செய்தது, 6 இந்திய வீரர்கள் சென்சுரி அடித்தது உள்ளிட்ட  பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது சீனியர் அணி. அதே போல இன்று 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியும் மெகா சாதனை நிகழ்த்தியிருக்கிறது.

யுவராஜ் , விராட் கோலி  என பல வீரர்கள் இந்திய அணியில் நுழைந்தது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையில் பிரகாசித்ததன் மூலம்தான்.  தற்போது 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் இருக்கிறார்.  வருங்காலத்தில் சீனியர் இந்திய அணி,  உலக அரங்கில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக இப்போதே இளம் வீரர்களை பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார் டிராவிட்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை போட்டிகள்,  வங்கதேசத்தில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இந்திய அணி, கனடா அணியை இன்று பயிற்சி ஆட்டத்தில் சந்தித்தது.

டாஸ் வென்ற இந்திய அணி,  முதலில் பேட்டிங் செய்தது. முதல் பந்தில் இருந்தே இந்திய வீரர்கள்,  கனடா அணியின் பவுலிங்கை துவம்சம் செய்தனர். இந்திய அணியின் கேப்டன் இஷான் சிங்,  86 பந்துகளில் 16 பவுண்டரி,  ஏழு சிக்சர் விளாசி 138 ரன்கள் குவித்தார்.  ரிக்கி பூ 71 பந்தில் 10 பவுண்டரி,  ஏழு சிக்சர் விளாசி 115 ரன்களை குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவரில்,  மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 485 ரன்கள் விளாசி தள்ளியது இந்தியா.

486 ரன்களை துரத்தினால் வெற்றி என்ற மாபெரும் இலக்கோடு களமிறங்கிய கனடா,  31 ஓவரில் வெறுமனே 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 372 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்த ஒருதின போட்டியில் 39 பவுண்டரிகளையும், 28 சிக்ஸர்களையும் இந்திய அணி விளாசியிருப்பது  குறிப்பிடத்தக்கது. மாபெரும் வெற்றிக்கு காரணமான  இளம் இந்திய அணிக்கு, ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. இதே வேகத்தில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

- பு.விவேக் ஆனந்த்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close